
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம். பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.
சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக