*உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல.
விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்
*சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை நல்ல முறையில் பராமரித்தால் அழகிய கூந்தலைப் பெறலாம். பெரும்பாலும் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும். .
*பலரும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தலைக்கும் மட்டும் பாதிப்பு இல்லாமல், அவர்களது உடல்நிலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வாரத்தில் ஒரு முறையாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் தலை முடியையும், சருமத்தையும் பாதுகாக்க முடியும்.
*உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைக்கு குளித்ததும் உடனடியாக உங்கள் சீப்புகளையும் நன்கு கழுவுவது மிக மிக அவசியம். தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்ற வேண்டும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக