பக்கங்கள்

19 ஆகஸ்ட் 2010

20 வயதுக்கும் 40 வயதுக்கும் காதல்,தற்கொலையில் முடிந்தது!


இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் சாவு. 20 வயது மாணவனுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த 40 வயதுப் பெண், அந்த மாணவன் கட்டாயப்படுத்தி கற்பழித்து, அதை பலரிடமும் சொன்னதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டு விட்டார்.புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் கற்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி அபிராமி சுந்தரி (40). இவர்கள் குறிஞ்சி நகர் 10-வது குறுக்கு தெருவில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.இவர்களது கடைக்கு எதிரே வசிக்கும் பாலிடெக்னிக் மாணவரான விஜயக்குமாருக்கும் அபிராமிசுந்தரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பைப் பயன்படுத்தி அபிராமிசுந்தரியை விஜயகுமார் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டாராம்.அத்தோடு தான் அபிராமி சுந்தரியுடன் உறவு கொண்டதை தனது நண்பர்களிடமும் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அவரை அடைய முயன்றுள்ளார். இதனால் அவமானம் அடைந்த அபிராமி சுந்தரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சாவதற்கு முன்பு அபிராமி சுந்தரி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், என்னுடைய சாவிற்கு நான் கடை வைத்திருக்கும் எதிர் வீட்டில் உள்ளவர்கள் தான் காரணம். என்னுடைய மானம் போனதற்கு அவர்களுடைய மகன்தான் காரணம். அவனால்தான் இந்த முடிவிற்கு வந்தேன். என்னை வலுகட்டாயமாக பலவந்தபடுத்தி கெடுத்து விட்டான்.வெளியில் சொன்னால் உன்னுடைய மானம்தான் போகும் என்று கூறியே என்னை பலவந்தபடுத்தி கெடுத்துவிட்டான். அவனுக்கு நீங்கள் தான் சட்டபடி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.பின்னர் தனது கணவருக்கு எழுதிய கடிதத்தில், அன்புள்ள என்னுடைய கணவருக்கு நான் உங்களிடம் கூறாமல் தவறு செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நான் போனபிறகு என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுங்கள். என்னை மறுபடியும் மன்னியுங்கள் என்று கூறியுள்ளார்.புகார் பதிவு செய்த போலீஸார் விஜயக்குமாரைக் கைது செய்து, அபிராமி சுந்தரியை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக