கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ருதி தெரிவித்தார்.
சமர்த்தாக பெங்களூரில் பி.காம் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி சினிமா உலகின் புதிய சிங்கார நாயகி. காதலர் குடியிருப்பு (முன்பு காவலர் குடியிருப்பு என பெயர்) என்ற படத்தின் நாயகிதான் இந்த ஸ்வீட் ஸ்ருதி.
வந்த வேகத்தில் தமிழ், கன்னடம், மலையாளத்தில் புகுந்து புறப்பட்டிருக்கிறார் ஸ்ருதி. கன்னடத்தில் சோனு என்ற பெயரில் நடிக்கிறாராம். தமிழில் மட்டும் ஸ்ருதிதானாம்.
ஸ்ருதி கூறியதாவது: எனக்கென்று எந்த கட்டுப்பாடும் இல்லை. கவர்ச்சியாகவும் நடிப்பேன், ஹோம்லியாகவும் நடிப்பேன். இப்படித்தான் நடிப்பேன் என்று தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். அதேசமயம், அதீத கவர்ச்சி எனக்கு ஆகாது என்கிறார் சற்றே தெளிவாக.
ஆனால் ஹோம்லியாக நடிப்பதுதான் எளிதானது. கவர்ச்சிகரமாக நடிப்பது எல்லோருக்கும் சரியாக வராது, சவாலானது அது என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக