பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2010

கணவர் வீட்டார் தரக்குறைவாக நடத்தினர்.



"கணவர் வீட்டார் என்னை தரக்குறைவாக நடத்தினர்" என்று நடிகை காவ்யா மாதவன் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகை காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதன்பின், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து காவ்யா, எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- "கணவர் வீட்டார் என்னை தரக்குறைவாக நடத்தினர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். என்னை ஒரு வேலைக்காரி போல நடத்தினர். வீட்டில் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள். திரைப்படத்துறையில் பிரபலமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார்கள். என்னை மிருகத்தைப்போல எண்ணி நரக வேதனை அடைய செய்தார்கள். அதைத்தொடர்ந்துதான் நான் விவாகரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்''. இவ்வாறு காவ்யா மாதவன் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு கோர்ட்டு ஏற்றுக்கொண்டு, நிஷால் சந்திராவுக்கு செப்டம்பர் 22-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக