பக்கங்கள்

28 ஆகஸ்ட் 2010

போதை கும்பலுடன் மதுஷாலினி, சார்மியும் தொடர்பாம்?


போதை மருந்து கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்த நடிகர் நடிகைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத் போலீஸார் விசாரணையில், த்ரிஷாவின் தொடர்புகள் குறித்து திடுக்கிடும் தகவல்களை கைதானவர்கள் கூறியிருக்கிறார்களாம்.
குறிப்பாக ரவிதேஜாவின் சகோதரர்கள் இதுகுறித்து முக்கிய தகவல்களைக் கூறியிருப்பதாகத் தெரிகிறது. த்ரிஷாவும் ரவிதேஜாவும் 3 படங்களில் தொடர்ந்து இணைந்து நடித்துள்ளனர். ரவிதேஜாவுக்கும் போதைப் பழக்கம் உண்டு என்று அவரது தம்பிகள் வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இப்போது பிரபல நடிகைகள் காம்னா ஜெத்மலானி, மதுஷாலினி, சார்மி, உதய்கிரண், தமிழின் பிரபல வில்லன்- குணச்சித்திர நடிகர், வம்புப் பார்ட்டி என 20க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர் நடிகைகளின் பெயர்களை கைதாகியுள்ள ரவிதேஜாவின் தம்பிகள் மற்றும் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள சாய்ரா பானு தெரிவித்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல்காரனான நைஜீரிய வாலிபர் விக்டர் மொபைலில் இவர்களின் செல்போன் நம்பர் இருந்துள்ளது. இவர்களில் திரிஷா மட்டுமே மறுப்பு வெளியிட்டுள்ளார். தனக்கு போதை பழக்கம் கிடையாது என்றும் தன்னுடைய இமேஜை கெடுக்க திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக