பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2010

குழந்தைக்கு பால் கொடுத்ததால் வந்தது விபரீதம்.


லாரன் மேகேன்னா , 22 வயது இளம்பெண். தன்னுடைய ஆறு வாரக் குழந்தையுடன் பிரித்தானிய பேருந்தில் பயணம் செய்துள்ளார். குழந்தைக்கு பால் கொடுத்ததால் பாதி வழியில் ஓட்டுனரால் இறக்கி விடப்பட்டதாகவும் குழந்தையுடன் ஒரு மைல் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
இந்த தவறை செய்ததற்காக பேருந்தின் ஓட்டுனர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த பெண்ணின் குற்றச்சாட்டை ஓட்டுனரும் பேருந்து நிர்வாகமும் மறுத்துள்ளன.
தங்கள் நிறுவன ஓட்டுனர்கள் பயணிகளிடம் பேசுவதில்லை என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதொடு அங்கிருந்த சி.சி.டி.வி காமெராவில் இந்த பெண் கூறும்படியான எந்த வாக்குவாதமும் நடைபெற்று இறக்கி விடப்பட்டதாக பதிவாகவில்லை எனவும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் இது போன்று எந்த ஓட்டுனர் பயணிகளிடம் பேசியது தெரிய வந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிருவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளதோடு இந்தப் பெண் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
தான் ஏன் பொய் பேச வேண்டும் இந்த விடயத்தில் பொய் பேசுவதால் தனக்கு ஏதும் ஆதாயம் கிடைக்கப் போவதில்லை என்று வாதம் செய்கிறார் அந்தப் பெண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக