பக்கங்கள்

17 அக்டோபர் 2010

ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்!

நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீளமானது. அதில் இணையாவிட்டால் அவர்களை ஒருமாதிரியாக பார்க்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அக்கவுண்ட் வைத்திருக்கும் தென்னிந்தியப் பிரபலங்களில் திரிஷாவும் ஒருவர். ஆனால் அவரது பேஸ்புக் அக்கவுண்டை சில விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் திரிஷா. நேற்று காலை திரிஷாவின் பேஸ் புக் பக்கத்திற்குச் சென்ற அவரது நட்பு வட்டாரம், அது பிளாக் ஆகிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தனது தளம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திரிஷா உடனடியாக வேறு ஒரு அக்கவுண்ட்டைத் தொடங்கியுள்ளார். இதையாவது யாரும் நோண்டாமல் இருக்க வேண்டுமே என்று புலம்பி வருகிறாராம் திரிஷா.
சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் ட்விட்டர் தளத்திற்குள் சிலர் ஊடுறுவி விஷமம் செய்தது நினைவிருக்கலாம்.

13 அக்டோபர் 2010

அகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்!

ஆஹா ஓஹோவென ஓடும் என எதிர்பார்த்து வரலாற்று படம் எடுத்து மண்ணை கவ்விய செல்வமான டைரக்டரும், அவரது காதல் மனைவி அகர்வாலும் விவாகரத்து செய்து விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
விவாகரத்து முடிந்த கையோடு விதவிதமான லேட்டஸ்ட் ஸ்டில்களை எடுத்து, இன்னமும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்று தண்டோரோ போடத குறையாக அம்மணி எல்லா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஸ்டில்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார்.
அகர்வாலின் அழகை பார்த்து மயங்கிய பலரும் தங்களது படத்தில் நடிக்க அழைத்தாலும், விரல் நடிகரின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டினார் அகர்வால். படத்தில் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சிம்பு கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்திருக்கிறார் அகர்வால்.
இதுஒருபுறம்மென்றால்… இந்த அர்வாலால் முன்னணி இளம் ஹீரோக்கள் 2 பேர் ஒருவர் மீது ஒருவர் ‌செம கடுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. விரல் நடிகரும், உச்ச நடிகரின் மருமகனும்தானாம்.
தனது அண்ணனின் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று மருமகன் நடிகர் கூறி வருகிறாராம்.
ஆனால் விரல் தரப்போ… படத்தில் பெரிய காஸ்டிங் தேவைப்பட்டதால் அகர்வாலை ‌போட்டிருக்கிறோம், என்று கூறியதுடன் மருமகன் மீது கடுப்பில் இருக்கிறதாம்.

11 அக்டோபர் 2010

துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி நீது சந்திரா காயம்!

அமீர் இயக்கும் ஆதி பகவன் படப்பிடிப்பின் போது துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி சென்றதால் நடிகை நீத்து சந்திரா காயம் அடைந்தார்.
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடிக்கும் படம் ஆதிபகவன். அமீர் இயக்குகிறார். திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த போது விபத்து ஏற்பட்டு நீது சந்திரா காயம் அடைந்தார்.
அவர் உதட்டில் துப்பாக்கி குண்டு உராய்ந்து சென்றது. ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து பற்றி நீது சந்திரா கூறுகையில், “ஆதிபகவன் படத்தில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. தாய்லாந்து துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் காரில் இருந்து இறங்கி கப்பலை நோக்கி செல்வது போன்று காட்சி எடுத்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடப்பது போல் சீன்கள் வைத்து இருந்தனர்.
ஷாட் ஓகே சொன்னதும் காரில் இருந்து இறங்கி நடந்தேன். அப்போது ஒரு குண்டு என்னை நோக்கி வந்தது. நான் விலகினேன். ஆனாலும் என் உதட்டில் உராய்ந்தபடி சென்றது. இதனால் உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் வலி தாங்க முடியாமல் அழுதேன். பார்வை மங்கியது. உடனடியாக முதலுதவி சிகிச்சசை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். இப்போது ஓய்வில் உள்ளேன்”, என்றார்.

08 அக்டோபர் 2010

நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க எதிர்ப்பு!

பிரபுதேவாவுடன் கள்ளக்காதல் கொண்டுள்ள நடிகை நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த வேடத்தில் மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம்.
தெலுங்கு இயக்குநர் பாபு, என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை வைத்து ஸ்ரீராம ஜெயம் என்ற புராணப் படத்தை இயக்கவுள்ளார். இதில் பாலகிருஷ்ணா ராமராக நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளனர்.
இந்தநிலையி்ல் பிரபுதேவா- நயனதாரா கள்ளக்காதல் குறித்து பிரபுதேவாவின் மனைவி ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்கக் கூடாதுஎன்று அவர்கள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு, அழகாக குடும்பம் நடத்தி வருபவரும், குடும்பப் பாங்கான முகம் கொண்டவருமான மாதுரி தீட்சித்தை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தீர்மானித்து அவரை அணுகியுள்ளாராம் இயக்குநர் பாபு.

07 அக்டோபர் 2010

ர‌ஜினியின் கடவுள்கள்!

ர‌ஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ர‌ஜினியின் கடவுள் யார்?
ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ர‌ஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.
மும்பைக்கு ரோபோ பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த ர‌ஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.
தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.
பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ர‌ஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதி‌ரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் ர‌ஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ரா‌ஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டிய‌ர், அவரது கடவுள் பால் தாக்கரே.
துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போ‌ஜ்பு‌ரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்… ர‌ஜினியின் மேலும் சில கடவுள்களை தெ‌ரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.

04 அக்டோபர் 2010

கதை பிடித்தால்தான் நடிப்பேன் – தமன்னா!

எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், சிக் நாயகிகளில் முக்கியமானவருமான தமன்னா கை நிறையப் படங்களுடன் நம்பர் ஒன் நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னணியில் இருந்தாலும் கூட அதிக படங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு நடித்துக் குவிக்க தான் விரும்பவில்லை என்றும் நல்ல ரோல்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறுகிறார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
கல்லூரி படத்தில் நடித்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கல்லூரிப் படத்தில் நடித்தபோது நான் மேக்கப் கூட போடவில்லை. இயல்பான தோற்றத்திலேயே நடித்தேன். அந்தப் படம் முழுக்க வெளிப்புறப்படப்பிடிப்புதான். அதுபோன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார் தமன்னா.
பரவாயில்லை, சதையை நம்பும் நாயகிகளுக்கு மத்தியில் கதையை நம்பும் தமன்னா வித்தியாசமானவர்தான்.

02 அக்டோபர் 2010

அனுஷ்காவின் உயரம் அளந்த சிம்பு...

சிம்பு, பரத் இணைந்து நடித்துள்ள ‘வானம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரெடக்‌ஷன் வேலை தொடங்குவதற்கு முன் அப்படியே ஒரு பிரஸ் மீட் வைத்துவிடலாமே என்ற எண்ணத்தில், அதற்கான ஏற்பாட்டையும் கச்சிதமாய் செய்திருந்தனர் வானம் படக்குழுவினர்.
இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்... சிலம்பரசன், பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கிரிஷ், தயாரிப்பாளர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
அனைத்து மீடியாக்களின் பார்வையும் சிம்பு, அனுஷ்கா மீதுதான்...
தெலுங்கு ‘வேதம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அதன் ரீமேக்தான் வானம் என்பதால், இதில் அனுஷ்காவை எப்படியும் நடிக்கவைத்தே ஆகவேண்டும் என பகீரத முயற்சியெல்லாம் செய்தார் சிம்பு. இது போக ‘நான் அனுஷ்காவின் ரசிகன்’ என்று வேறு சொல்லிவரும் சிம்புவிடம் அது பற்றி கேட்டதற்கு...
"நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகனாகவும் மாறமாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன். 'அருந்ததி' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகனாக மாறிவிட்டேன்.
பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகனாக மாறினேன்” என்றார் சிம்பு.
இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, அனுஷ்கா உயரமானவர் ஆச்சே, அவர்கூட நீங்க சேர்ந்து நடிச்சா பொருத்தமாக இருக்குமா?... அப்படி கேட்டதுதான் தாமதம்...
"அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சிம்புவிடமிருந்து பதில் அம்பாக வெளிப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அனுஷ்காவையும் அழைத்து பக்கத்தில் நின்று அளந்து காட்டினார். (சிம்பு அனுஷ்காவைவிட கொஞ்சம் உயரம்போல்தான் தெரிந்தது...)
கடைசியாக ஒரு கேள்வி, இந்தப் படத்தில் பரத்துடன் நடித்தது போல, தனுஷுடன் நடிப்பீர்களா?...
“தனுஷுடன் மட்டுமல்ல நான் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை" என வெளிப்படையாக பேசினார். அதுதானே சிம்பு.