நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீளமானது. அதில் இணையாவிட்டால் அவர்களை ஒருமாதிரியாக பார்க்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அக்கவுண்ட் வைத்திருக்கும் தென்னிந்தியப் பிரபலங்களில் திரிஷாவும் ஒருவர். ஆனால் அவரது பேஸ்புக் அக்கவுண்டை சில விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் திரிஷா. நேற்று காலை திரிஷாவின் பேஸ் புக் பக்கத்திற்குச் சென்ற அவரது நட்பு வட்டாரம், அது பிளாக் ஆகிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தனது தளம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திரிஷா உடனடியாக வேறு ஒரு அக்கவுண்ட்டைத் தொடங்கியுள்ளார். இதையாவது யாரும் நோண்டாமல் இருக்க வேண்டுமே என்று புலம்பி வருகிறாராம் திரிஷா.
சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் ட்விட்டர் தளத்திற்குள் சிலர் ஊடுறுவி விஷமம் செய்தது நினைவிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக