பக்கங்கள்

02 அக்டோபர் 2010

அனுஷ்காவின் உயரம் அளந்த சிம்பு...

சிம்பு, பரத் இணைந்து நடித்துள்ள ‘வானம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரெடக்‌ஷன் வேலை தொடங்குவதற்கு முன் அப்படியே ஒரு பிரஸ் மீட் வைத்துவிடலாமே என்ற எண்ணத்தில், அதற்கான ஏற்பாட்டையும் கச்சிதமாய் செய்திருந்தனர் வானம் படக்குழுவினர்.
இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்... சிலம்பரசன், பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கிரிஷ், தயாரிப்பாளர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
அனைத்து மீடியாக்களின் பார்வையும் சிம்பு, அனுஷ்கா மீதுதான்...
தெலுங்கு ‘வேதம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அதன் ரீமேக்தான் வானம் என்பதால், இதில் அனுஷ்காவை எப்படியும் நடிக்கவைத்தே ஆகவேண்டும் என பகீரத முயற்சியெல்லாம் செய்தார் சிம்பு. இது போக ‘நான் அனுஷ்காவின் ரசிகன்’ என்று வேறு சொல்லிவரும் சிம்புவிடம் அது பற்றி கேட்டதற்கு...
"நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகனாகவும் மாறமாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன். 'அருந்ததி' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகனாக மாறிவிட்டேன்.
பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகனாக மாறினேன்” என்றார் சிம்பு.
இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, அனுஷ்கா உயரமானவர் ஆச்சே, அவர்கூட நீங்க சேர்ந்து நடிச்சா பொருத்தமாக இருக்குமா?... அப்படி கேட்டதுதான் தாமதம்...
"அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சிம்புவிடமிருந்து பதில் அம்பாக வெளிப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அனுஷ்காவையும் அழைத்து பக்கத்தில் நின்று அளந்து காட்டினார். (சிம்பு அனுஷ்காவைவிட கொஞ்சம் உயரம்போல்தான் தெரிந்தது...)
கடைசியாக ஒரு கேள்வி, இந்தப் படத்தில் பரத்துடன் நடித்தது போல, தனுஷுடன் நடிப்பீர்களா?...
“தனுஷுடன் மட்டுமல்ல நான் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை" என வெளிப்படையாக பேசினார். அதுதானே சிம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக