பக்கங்கள்

11 அக்டோபர் 2010

துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி நீது சந்திரா காயம்!

அமீர் இயக்கும் ஆதி பகவன் படப்பிடிப்பின் போது துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி சென்றதால் நடிகை நீத்து சந்திரா காயம் அடைந்தார்.
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடிக்கும் படம் ஆதிபகவன். அமீர் இயக்குகிறார். திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த போது விபத்து ஏற்பட்டு நீது சந்திரா காயம் அடைந்தார்.
அவர் உதட்டில் துப்பாக்கி குண்டு உராய்ந்து சென்றது. ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து பற்றி நீது சந்திரா கூறுகையில், “ஆதிபகவன் படத்தில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. தாய்லாந்து துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் காரில் இருந்து இறங்கி கப்பலை நோக்கி செல்வது போன்று காட்சி எடுத்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடப்பது போல் சீன்கள் வைத்து இருந்தனர்.
ஷாட் ஓகே சொன்னதும் காரில் இருந்து இறங்கி நடந்தேன். அப்போது ஒரு குண்டு என்னை நோக்கி வந்தது. நான் விலகினேன். ஆனாலும் என் உதட்டில் உராய்ந்தபடி சென்றது. இதனால் உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் வலி தாங்க முடியாமல் அழுதேன். பார்வை மங்கியது. உடனடியாக முதலுதவி சிகிச்சசை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். இப்போது ஓய்வில் உள்ளேன்”, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக