பக்கங்கள்

04 அக்டோபர் 2010

கதை பிடித்தால்தான் நடிப்பேன் – தமன்னா!

எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், சிக் நாயகிகளில் முக்கியமானவருமான தமன்னா கை நிறையப் படங்களுடன் நம்பர் ஒன் நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னணியில் இருந்தாலும் கூட அதிக படங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு நடித்துக் குவிக்க தான் விரும்பவில்லை என்றும் நல்ல ரோல்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறுகிறார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
கல்லூரி படத்தில் நடித்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கல்லூரிப் படத்தில் நடித்தபோது நான் மேக்கப் கூட போடவில்லை. இயல்பான தோற்றத்திலேயே நடித்தேன். அந்தப் படம் முழுக்க வெளிப்புறப்படப்பிடிப்புதான். அதுபோன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார் தமன்னா.
பரவாயில்லை, சதையை நம்பும் நாயகிகளுக்கு மத்தியில் கதையை நம்பும் தமன்னா வித்தியாசமானவர்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக