ரஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ரஜினியின் கடவுள் யார்?
ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ரஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.
மும்பைக்கு ரோபோ பிரிமியர் ஷோவுக்கு வந்த ரஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.
தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.
பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ரஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் ரஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ராஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டியர், அவரது கடவுள் பால் தாக்கரே.
துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போஜ்புரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்… ரஜினியின் மேலும் சில கடவுள்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக