ஜெயங்கொண்டம்: உடையார் பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் சத்யாவிற்கும், வடவீக்கத்தைச் சேர்ந்த குமணன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இதையறிந்த சத்யாவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா, குமணனுடன் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சத்யாவை அவரது பெற்றோர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். இதற்கிடையில் சத்யாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இந்த விஷயம் அறிந்த குமணன்,. நேற்று இரவு சத்யாவை கடத்தியுள்ளார். மகள் சத்யாவை காணவல்லை என, உடையார் பாளையம் காவல்நியைத்தில் பிச்சை புகார் அளித்ததையடுத்து, போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சத்யா - குமணன் ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், சத்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து, குமணன் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம், சமாதானம் செய்து வரும் சத்யா பெற்றோர், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும், திருமணத்தை உடனே நடத்த வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக