பக்கங்கள்

15 செப்டம்பர் 2010

கமலை சந்தோஷப்படுத்திய 3 ஷா!

உலக நாயகன் கமலஹாசனை நடிகை த்ரிஷா சந்தோஷப்படுத்தியுள்ளார். ஆமாங்க, தனக்கு பிடித்த நடிகர் கமல்தான் என்று கூறியிருக்கிறார் 3 ஷா. தமிழில் முன்னணி நடிகையாக உள்ள அவர் தெலுங்கிலும் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை யாக இருக்கிறார். “காட்டா மிட்டா” படம் மூலம் இந்தியிலும் கால் பதித்துவிட்டார். உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என பலமுறை அவரிடம் கேட்கப்பட்டும் இதுவரை அதற்கு பதில் சொல்லவே இல்லை. தற்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து விட்டார். யாரையேனும் ஒருவர் பெயரை சொன்னால் மற்ற ஹீரோ கோபப்படுவார் என்ற பயத்தில் இந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து வந்தார்.
இப்போது முதல் முறையாக தனக்கு பிடித்த நடிகர் கமல் என்று வெளிப்படை யாக கூறி இருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக் கும் “மன்மதன் அம்பு” படத் தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டியே நடந்தது.
தனது நலம் விரும்பிகளை தூது அனுப்பி வாய்ப்பை தட்டி பறிக்க நயன்தாரா முயன்றார். ஆனால் திரிஷா தான் கதாநாயகி என்பதில் கமலும் ரவிக்குமாரும் உறுதியாக இருந்து விட்டனர். இப்படத்தின் டூயட் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
டுவிட்டரில் திரிஷா கூறி இருப்பதாவது :
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதுவரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியை தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்கு பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை.
நடிகைகளில் ஏற்கனவே சிம்ரனை பிடித்தது. இப்போது தமன்னா மற்றும் சமந்தாவை பிடிக்கும் என்று டுவிட்டரில் கூறியுள்ளார் த்ரிஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக