05 செப்டம்பர் 2010
பெண்ணை இழுத்துச் சென்று சிறையில் பூட்டி கொடுமைப்படுத்திய காவலர் - அதிர்ச்சியூட்டும் காணொளி இணைப்பு.
வில்ட்ஷிர் பகுதியில் 57 வயதாகும் பமேலா சொமேர்வில்லே என்ற பெண்ணை காவல்துறை அதிகாரி தரையில் இழுத்துச் சென்று சிறைக்குள் பூட்டியதுடன் அந்த பெண்ணை காயப்படுத்தி உணர்வற்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பின் அந்தப் பெண் கண்களில் பலத்த காயங்களுடனும் ரத்தத்துடனும் வெளியே வந்துள்ளார். சந்தை ஆராய்ச்சியாளராக பணி புரிந்த இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஜி-20 எதிர்ப்புக் கூட்டங்களின் போது காவல்துறைக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள உறவு நிலையின் தன்மை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்த போது தன்னுடைய காரில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது சி.சி.டி.வி காமேராவிலும் பதிவாகியுள்ளது. இதனால் அந்தப் பெண் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் குற்றம் நிருபிக்கப்பட்டதால் அன்ட்ரீயுஸ் என்ற அந்த காவலருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
தான் எந்த தவறும் செய்யாமல் காவல்துறை அதிகாரியால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அது போன்ற நிலை வேறு யாருக்கும் இனி ஏற்படக் கூடாது என்பதாலேயே வழக்கு பதிவு செய்ததாகவும் அந்தப் பெண் கூறியதோடு இந்த தண்டனை பொது மக்களை துன்புறுத்தும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக