"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!
சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.
பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்
இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.
இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.
இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.
இவர்கள் எல்லோருக்குமே நோக்கம் ஒன்றே ஒன்றுதான்; அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதவிதமான பெண்களை கட்டிலில் வீழ்த்துவதுதான்! கூடவே பெண்கள் புடை சூழ வளைய வருவதும், தங்களுக்கு பெண் ஃபிரண்ட்ஸ்கள் அதிகம் என்பது போன்ற இமேஜை நண்பர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளவும் இதுபோன்று செயல்படுவார்கள்.
அதே சமயம் அசரடிக்கிற பெர்சனாலிட்டி மற்றும் கொஞ்சமே கொஞ்சம் போக்கிரித்தனத்துடன் பெண்களை தானாகவே வந்து வட்டமடிக்க வைக்கிற பிளேபாய்களும் உண்டு.
ஆனால் பெண்கள் மத்தியில் இவர்களுக்கு பெயர் ஸ்வீட் ராஸ்கலாம்!
இந்த மாதிரியான ஆண்கள் குறித்துதான், ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, மேற்கூறிய "ஆயுசு குறைச்சல்" என்ற அதிர்ச்சி வெடியை கொளுத்தி போட்டுள்ளது!
இத்தகைய பிளேபாய்கள் மற்றும் ஸ்வீட் ராஸ்கல்களிடமெல்லாம் காணப்படும் ஒரு பொதுவான குணம் மனம்போன போக்கில் வாழ்வது!
வாழ்க்கை தொடர்பான எத்தகைய நெறிமுறைகளுக்கும் உட்படாமல், புதுப்புது பெண்களை தேடி கண்டபடி திரியும் இவர்களது இந்த குணம்தான் இவர்களது ஆயுளுக்கும் எமனாக அமைந்துவிடுவதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்ட்ரேலியாவின் பிரபல ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் ஜோர்டான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக