பக்கங்கள்

02 செப்டம்பர் 2010

நாய்க்குட்டிகளை ஆற்றில் வீசும் கொடூரம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)


கடந்த வாரம் பிரித்தானியாவை சேர்ந்த 45 வயதாகும் மேரி பேல் என்ற பெண் கொவென்ட்ரி பகுதியில் பூனையை குப்பைத்தொட்டியில் போட்டு மூடிய சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே கோபத்தை உண்டுபண்ணியதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் தற்போது சிகப்பு சட்டை அணிந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் உயிருடன் இருக்கும் நாய்க்குட்டிகளை கொல்வதற்காக வேகமாக ஓடும் ஆற்றுத் தண்ணீருக்குள் தூக்கியெறியும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது விலங்கின ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த வீடியோ கிழக்கு ஐரோப்பாவின் கிரோடியா பகுதியில் எடுக்கப்பட்டிருப்பதை விலங்கின ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாய்குட்டிகள் பயந்து சத்தம் எழுப்பியும் சிறிதும் இரக்கமில்லாமல் அவற்றை தூக்கி ஆற்றுக்குள் போடும் இந்த பெண்ணையும் கண்டறிந்து அதே போல் தூக்கி எறிய வேண்டும் என்ற அளவிற்கு விலங்கின ஆர்வலர்களிடையே இந்த வீடியோ மிகுந்த பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
அந்த பெண் யார் என்பதை கண்டறியும் ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். தினமும் எங்கள் சேவை அமைப்பிற்கு இது போன்ற கொடுமைகள் அடங்கிய படங்களும் வீடியோக்களும் வந்து கொண்டு தான் உள்ளது. விலங்குகளை கொடுமைப்படுத்தும் மக்களின் இந்த மனோபாவம் மாற வேண்டும் என விலங்குகளுக்கான சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக