பக்கங்கள்

14 செப்டம்பர் 2010

நடிகை ரவீனாடண்டன் வீட்டில் கொள்ளை!

‘ஆளவந்தான்’, ‘சாது’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ரவீனா டண்டன். திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவரது மாமியார் வீடு, மும்பை லிங்க்கிங் சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் உள்ளது.
இந்த வீட்டில் கணவர் தடானி, மாமனார் குந்தன் தடானியுடன் ரவீனா வசித்து வருகிறார். கடந்த வாரம் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் ரவீனா சென்றிருந்தார். மாலையில் சென்றவர்கள், நள்ளிரவில் வீடு திரும்பினர்.
மறுநாள் காலையில் தனது அறையில் இருந்த பீரோவை ரவீனாவின் மாமனார் குந்தன் திறந்தபோது, அதிர்ந்தார். சூட்கேசில் வைத்திருந்த 9 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக பாந்த்ரா போலீசீல் அவர் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ரவீனா வீட்டில் வேலை செய்த ராம் யாதவ் (40), அசோக் யாதவ் (25) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணையில் நடுங்கிப் போன அந்த வேலைக்காரர்கள், கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
‘‘திருடலாம் என முடிவு செய்தே வேலையை விட்டு சென்றுள்ளனர்.
ரவீனா குடும்பத்தார் பார்ட்டிக்கு செல்லும் தேதியை இருவரும் அறிந்து வைத்திருந்தனர். அன்றைய தினம் கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அதே மாதிரி பீரோவுக்கும் கள்ளச்சாவி பயன்படுத்தியுள்ளனர்.
பாந்த்ரா போலீசார் அவர்களை கைது செய்து பணத்தையும் மீட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக