பக்கங்கள்

29 நவம்பர் 2010

ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை.

தமிழரையும் தமிழர் ரசனையயும் கீழ்த்தரமாகப் பேசிய நடிகர் ஆர்யாவின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்து மக்கள் கட்சி.
வெளிநாட்டு பட விழாவொன்றில் ஆர்யா பங்கேற்றுப் பேசும்போது, நான் ஒரு மலையாளி. தமிழ் படங்களில் நடிக்க தெரியாதவர்களும் நடிக்கலாம். அவர்கள் அந்த அளவுதான் ரசிப்பார்கள். பணம் கொட்டும். ஆனால் மலையாள படங்களில் நடிக்க தெரிந்தவர்களால் மட்டுமே நடிக்க முடியும். இங்குதான் தரமான படங்கள் வருகின்றன, என்று கூறியிருந்தார்.
இதனை ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் வி சி குகநாதன் கண்டித்துப்பேசினார்.
அவரைத் தொடர்ந்து, இவ்விஷயத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள இந்து மக்கள் கட்சி.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்யா உருவப் படத்தக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் பல்லடத்தில் நடந்த போராட்டம் தமிழக மெங்கும் தொடரும். அவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள சிக்குபுக்கு படத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம். தமிழ் சினிமாவில் சம்பாதித்து விட்டு தமிழ் நடிகர்களை கேவலமாக பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. ஆர்யா தாராளமாக தரமான படங்கள் எடுக்கும் மலையாள பட உலகுக்கு போகலாம்..." என்றார்.
சிக்குபுக்கு படம் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 நவம்பர் 2010

சம்பள பாக்கி.. நடிகை சங்கீதா புகார்!

தம்பிக்கோட்டை படத்தில் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தராமல் ஏமாற்றுவதாக நடிகை சங்கீதா புகார் கூறியுள்ளார்.
நரேன், பூனம் பாஜ்வா, பிரபு, மீனா என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் படம் தம்பிக்கோட்டை.
இப்படத்தில் வில்லியாக சங்கீதா நடிக்கிறார். இந்த படத்தில் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக சங்கீதா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
தனது புகாரில், "தம்பிக்கோட்டை படம் முடிந்துவிட்டது. இதில் எனக்கு ரூ.3.5 லட்சம் சம்பள பாக்கி உள்ளது. ஒப்பந்தப்படி கடந்த பிப்ரவரி மாதமே இந்த பணத்தை தந்திருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றி விட்டனர். இறுதிநாள் படப் பிடிப்பில் சம்பள பாக்கிக்காக செக் கொடுத்தார்கள். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அதன் பிறகு பலமுறை பணம் கேட்டு தொடர்பு கொள்ள முயன்றேன். பொருட்படுத்தவே இல்லை.
எனவே எனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தொகையை நடிகர் சங்கம் தலையிட்டு வாங்கி கொடுக்க வேண்டுகிறேன்..." என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த புகாரைப் பரிசீலித்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

26 நவம்பர் 2010

நந்தலாலா சொந்தக் கதையா?

நந்தலாலா படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல்தானே இது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே அதற்கு பதில் சொல்லாத மிஷ்கின், கோபமாக 'இந்தப் படம் ஒரிஜினல்... இதை காப்பி என்று நிரூபிக்க முடியாது' என்றெல்லாம் ஆவேசப்பட்டார். இடையில் நீண்ட நாட்கள் படம் வெளியாகாமல் இருந்தது.
இப்போது படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி போடப்பட்டது. படம் முடிந்த பிறகு வந்த மிஷ்கின், இது தன்னுடைய சொந்தக் கதை என்றும், தனது மூத்த சகோதரர் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பில் எடுத்ததாகவும் கூறினார்.
படம் குறித்த விமர்சனத்தை பிறகு பார்க்கலாம். ஆனால் இந்தப் படம் குறித்த சில உண்மைகளைப் பார்க்கலாம்.
நந்தலாலாவில் வரும் சில பாத்திரங்கள் தவிர, கதை, எடுக்கப்பட்ட விதம், காட்சி அமைப்பு முழுக்க முழுக்க ஜப்பானிய படமான கிகுஜிரோவின் தழுவல் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நந்தலாலா கதைக்குப் போகும் முன், கிகுஜிரோவின் கதை என்னவென்பதைப் பார்த்துவிடுவோம்:
தகேஷி கிடானோ என்பவர் 1999-ம் ஆண்டு எடுத்த படம்தான் கிகுஜிரோ (Kikujiro). சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட படம். பட விழாக்களில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது.
ஒரு கோடை விடுமுறையில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிப் புறப்படுகிறான். ஒரு புகைப்படமும் முகவரியும் மட்டுமே தாயின் ஆதாரமாகக் கிடைக்கிறது அவனுக்கு. அவனது பயணத்தில் உடன் சேர்ந்து கொள்கிறான் கிகுஜிரோ என்ற திருடன், ஆனால் சிறுவனுக்கு உதவும் நல்ல மனசுக்காரன்.
அவர்களது நெடுஞ்சாலைப் பயணம் தொடர்கிறது... வழியில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முதலில் முரண்பட்டு பின்னர் உதவுகிறார்கள். சுமோ சண்டைக்காரர்கள் மாதிரி குண்டாக இருவர் எதிர்ப்படுகிறார்கள். கிகுஜிரோவுக்கும் சிறுவனுக்கும் உதவுகிறார்கள்.
குறிப்பிட்ட ஊருக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்கொரு பக்கம் தாயின் வீட்டைத் தேடுகிறார்கள். கடைசியில் கிகுஜிரோ அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவளோ புதிய கணவன், புதிய பெண் குழந்தை என செட்டிலாகிவிட்டிருக்கிறாள். கிகுஜிரோ வந்த விஷயத்தைச் சொன்னதும், தன் மகனைக் கூட்டி வந்து வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே என்று கெஞ்சுகிறாள்.
அங்கிருந்து கிளம்பும் கிகுஜிரோ, அந்த ஊரில் சிறுவன் தேடும் அம்மா இல்லை என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்புகிறான். அப்போது கிகுஜிரோவுக்கு ஒரு ஹோமில் விடப்பட்டுள்ள தனது அம்மா நினைவுக்கு வருகிறாள்.
கடைசியில் தான் தேடும் அம்மா வரமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்கிறான் சிறுவன். அவனும் கி்குஜிரோவும் அவரவர் வழியில் பிரிகிறார்கள்...
-இப்போது மிஷ்கின் 'சுட்டுள்ள' நந்தலாலாவைப் பாருங்கள்!

24 நவம்பர் 2010

விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, செயல்கள்!- வனிதா அதிரடி!

தந்தை விஜயகுமார் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக மகள் வனிதா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜயகுமார் குடும்ப விவகாரம், பல வில்லங்கங்களை வெளிக் கொணர ஆரம்பித்துள்ளது.
விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண்குமார் ஆகியோர் தன்னை கடுமையாகத் தாக்கியதாக போலீசில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மூவரையும் கைது செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை 11.30 மணிக்கு குழந்தைகள் ஜோவிகா (வயது 7), ஜெய்னிதா (2 1/2 வயது) ஆகியோரை அழைத்துக்கொண்டு வனிதா சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு டி.ஜி.பி. லத்திகா சரணை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் டி.ஜி.பி. அலுவலகம் வெளியே ரோட்டில் நின்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "தீபாவளி பண்டிகை அன்று மகன் விஜய ஸ்ரீஹரியை என் தந்தை விஜயகுமார் வீட்டுக்கு அழைத்து போனேன். பிறகு அவனை திரும்ப அழைத்து சென்றபோது விஜயகுமாரும், அருண் விஜய்யும் தடுத்தனர். மகனை என்னோடு அனுப்ப மறுத்தார்கள். எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அருண்விஜய் காலால் என்னை எட்டி உதைத்தார். கொலை மிரட்டலும் விடுத்தார்.
இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்தேன். அருண்விஜய் மீது வன் கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினேன். 7ம் தேதி அன்று இந்த புகாரை அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
என் தந்தை விஜயகுமார் 15ம் தேதி என்னுடைய கணவர் ஆனந்தராஜ், அவரது கையை முறுக்கி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீது ஆனந்தராஜை கைது செய்து விட்டனர். விஜயகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி என் கணவரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். மகன் அருண் விஜய்யை காப்பாற்ற மகள் என்றும் பாராமல் என் மேல் புகார் அளித்துள்ளார்.
எனது முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விஜய ஸ்ரீஹரியை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மூன்றரை வருடம் போராடி மீட்டு வந்தேன். அப்போது எனது தந்தை எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எதிர்காலத்தில் எனது மகனால் சொத்துக்கு பிரச்சினை வரும் என்று கருதி அவனை தன்னோடு வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
இவர்களின் சொத்தும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். இவர்கள் உறவே எனக்கு வேண்டாம்.
நாறிப் போய்விடும்....
என் தந்தை விஜயகுமார் பற்றி நிறைய ரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்.
ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திணறினார்கள். என் கணவர்தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
விஜய்குமார் வீட்டில் எவ்வளவோ அசிங்கங்கள் நடக்கின்றன. சட்டவிரோதமான பல காரியங்கள் நடக்கின்றன. இவற்றை வெளியில் சொல்லத்தான் போகிறேன். அப்போது இவர்கள் கதை நாறப் போகிறது.
அருண் விஜய் ஸ்டண்ட் பயிற்சி எடுத்துள்ளார். அவர் போயும் போயும் ஒரு பெண்ணிடத்தில் தைரியத்தை காட்டுகிறார். விஜயகுமார் மீடியா என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்துள்ளேன். அது அருண் விஜய்க்கு பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் என்னை அடிக்கிறார்.
இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு முக்கிய காரணம் என் தங்கை ப்ரீதாவும், அவள் கணவர் இயக்குநர் ஹரியும்.
மதுரவாயல் போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவேதான் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளேன். டி.ஜி.பியும் ஒரு பெண் என்பதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று கருதுகிறேன்.
விஜயகுமார் குடும்பத்தினர் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றனர். அது நடக்காது. தற்கொலை செய்ய நான் கோழையல்ல. துணிச்சலாக நின்று ஜெயித்து காட்டுவேன்..." என்றார் வனிதா.

21 நவம்பர் 2010

புத்தாண்டு ஹோட்டல் குத்தாட்டம்-நடிகைகளுக்கு வலைவீச்சு!

புத்தாண்டு வேகமாக நெருங்கி வருவதால், டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் பார்ட்டிகளில் ஆடுவதற்கு நடிகைகளை புக் செய்யும் பணியில் நட்சத்திர் ஹோட்டல்கள் படு தீவிரமாக இறங்கியுள்ளன.
ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டை இப்போதெல்லாம் பார்ட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கொண்டாடுவது பேஷனாகி விட்டது. அதிலும் நட்சத்திர ஹோட்டல்களில் டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் களை கட்டும்.
இதுபோக தீம் பார்க்குகளிலும் இப்போது புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள நடிகைகளை புக் செய்து ஆட வைப்பது வழக்கமாகி வருகிறது. மும்பையில் இதுபோன்ற ஆட்டங்களுக்காக கவர்ச்சி நடிகைகளை புக் செய்வது வழக்கம்.
இந்தப் பழக்கம் இப்போது சென்னைக்கும் பரவியுள்ளது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் சில ஆந்திரத்து அனுஷ்காவை புக் செய்ய கடுமையாக முட்டி மோதி வருகின்றனவாம். அதேபோல மல்லிகா ஷெராவத்தை வரவழைக்க ஒரு குரூப் கிளம்பியுள்ளதாம்.
இதேபோல சின்னத் திரை நடிகைகளுக்கும் கூட டிமான்ட் ஜாஸ்தியாகியுள்ளதாம். நல்ல சம்பளம் தரப்படுவதால் இதில் பங்கேற்க நடிகைகளுக்கும் இடையே கூட கடும் போட்டியாம்.

18 நவம்பர் 2010

ரகசிய இடத்தில் நயன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

முன்னெப்போதும் இல்லாத சிக்கலுக்கு நடுவே இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரபுதேவாவின் 'கள்ளக் காதலி'யான நயன்தாரா.
ஒரு பக்கம் பிரபுதேவாவை திருமணம் செய்வதா... 'கோயிங் ஸ்டெடியாக' தொடர்வதா என்ற குழப்பம்... இன்னொரு பக்கம் ரம்லத் வழக்கில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஆஜராவதா இல்லையா என்ற தயக்கம்... புதுப்படங்களை ஒப்புக் கொள்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் என நயன்தாராவுக்கு இது உண்மையிலேயே மறக்க முடியாத பிறந்தநாள்தான்.
இந்த விசேஷ நாளில் அனைவருடனும் இணைந்து கொண்டாட முடியாத சூழலில் உள்ளாராம் அவர். இதனால் தன் காதலன் பிரபு தேவாவுடன் ரகசிய இடத்தில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத இடத்தில் இருவரும் தங்கியுள்ளனராம்.
நயன்தாரா கைவசம் எலக்ட்ரா என்ற மலையாளப் படமும், ஒரு தெலுங்குப் படமும் மட்டுமே உள்ளன.
புதுப்படங்களில் அவர் நடிக்க மாட்டார் என பிரபுதேவா அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

15 நவம்பர் 2010

'தம்' அடிக்கும் ஐஸ்வர்யா ராய்!

ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ள குஸாரிஷ் படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போல நடித்திருக்கும் காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரோஷனும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ள இப்படம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரோஷனுடன் சேர்ந்து ஐஸ்வர்யா புகை பிடிப்பது போல காட்சி வருகிறது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குஸாரிஷ் படத்தில் வரும் காட்சிகள் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண் களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது.
நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன்.
உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன் என்றார் ஐஸ்வர்யா.

11 நவம்பர் 2010

விவேக்கின் பேச்சு உத்தம புத்திரனுக்கு ஆப்பு!

நடிகர் தனுஷ், ஜெனிலியா இணைந்து நடித்து வெளியாகியுள்ள உத்தமபுத்திரன் படத்தில் சிரிப்பு நடிகர் விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து பேசிய வசனத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கோவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளனராம்.
தீபாவளிக்கு வெளியான படங்களில் ஒன்று உத்தமபுத்திரன். இப்படத்தில் கவுண்டர் சமூகத்தினர் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக நடிகர் விவேக் பேசியுள்ள வசனங்கள் தங்களது சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கவுண்டர் சமுதாயத்தினர் கொதிப்படைந்துள்ளனர்.
இதையடுத்து கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் உ.தனியரசு தலைமையில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்சியின் கோவை மாநகர அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்தை புதன்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து படத்தை நிறுத்தி வைக்குமாறு திரையரங்கங்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து படம் திரையிடப்பட்டிருந்த 6 தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பிட்ட வசனங்கள் உள்ள காட்சிகளை நீக்கிவிட்டு அத் திரைப்படத்தை திரையிடுவதாக, திரையரங்க உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் மாநகர அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் கூறுகையில்,
எந்தவொரு சமூகத்தைப் பற்றி இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவது கண்டனத்துக்குரியது. இன்றைய சூழலில் திரைப்படங்கள் மக்களைச் சென்றடையக் கூடிய மிக முக்கியமான ஊடகமாக இருக்கிறது. இச்சூழலில், உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் விவேக் பேசும் வசனங்கள், கவுண்டர் சமூகத்தினருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எங்களது மனவேதனையை மாவட்ட ஆட்சியரிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் தெரியப்படுத்தினோம். ஆட்சியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புதன்கிழமை காட்சிகள் நிறுத்தப்பட்டன.
நாங்கள் வலியுறுத்தியுள்ள வசனங்கள் அடங்கிய காட்சிகளை தவிர்த்து, திரையிடுவதாக திரையரங்க உரிமையாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
விவேக் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே தனது படங்களில் ஆபாச வசனங்களை அதிகம் பேசுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் ஒரு சமூகத்தினரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் விவேக்.

08 நவம்பர் 2010

அஜீத்துக்கு 'அட்வைஸ்' கொடுத்த திரிஷா!

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு 'வாசனை'யான ஒரு ஐடியாவைக் கொடுத்துள்ளாராம் திரிஷா.
அஜீத்துடன் இணைந்து 'மங்காத்தா' ஆடிக் கொண்டிருக்கிறார் திரிஷா. 'மன்மதன் அம்பை' முடித்த கையோடு 'மங்காத்தா'வுக்கு வந்துள்ளதால் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார் திரிஷா. படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்துள்ளதாம். அடுத்த ஷெட்யூலுக்குத் தயாராகி வருகிறது யூனிட்.
இந்த இடைப்பட்ட கேப்பில் ட்விட்டர் மூலம் ஒரு சூப்பர் செய்தியை கொடுத்துள்ளார் திரிஷா.
அதில் திரிஷா கூறியிருப்பதாவது...
அஜீத் ஷூட்டிங்கின்போது தானே தனது கையால் தயாரித்த பிரியாணியைக் கொடுத்து அனைவரையும் அசத்தி விட்டார். உண்மையிலேயே அஜீத் மிகப் பெரிய சமையல்நிபுணர். அட்டகாசமான பிரியாணி அது. பேசாமல் உடனே ஒரு ரெஸ்டாரென்ட்டை தொடங்கி விடுங்கள் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
அதேபோல நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் கண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கும், மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் திரிஷா.
அதில், கமல்ஹாசனுக்கு எனது மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துகள். எனக்குப் பிடித்தமான சூப்பர் ஸ்டார் அவர்தான். அவருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. எனது இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடன் பணியாற்றுவது செம ஜாலியாக உள்ளது என்று கூறியுள்ளார் திரிஷா.

05 நவம்பர் 2010

ஒரே படத்தில் ரெண்டு 'கா'

ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் இப்போது நிறைய வர ஆரம்பித்து விட்டது. அந்த வரிசையில் யார் என்ற புதிய படம் 2 நாயகிகளுடன் வரவுள்ளது.
யார் என்று பல ஆண்டுகளுக்கு ஒரு தமிழ்ப் படம் வந்தது. இப்போது அதே பெயரில் புதிய படம் உருவாகிறது. முதலில் இதற்கு அஞ்சுகம் என்றுதான் வைத்திருந்தார்கள். பின்னர் என்ன யோசித்தார்களோ, அதை மாற்றி விட்டு யார் என்றுசூட்டி விட்டனர்.
இதில் முக்கிய நாயகியாக சினேகாவும், இன்னொரு நாயகியாக பூமிகாவும் நடிக்கின்றனர். இருவருக்கும் முக்கியமான பாத்திரங்களாம். இதனால் இமேஜ் பிரச்சினை வராது என்கிறார் இயக்குநர் ஜெயராம்.
அதற்கேற்றார் போல இரு நடிகைகளும் கா விடாமல் சமர்த்தாக நடித்துக் கொடுத்தார்களாம். அதுபோக நன்றாக பழகி தோழிகளாகி விட்டனராம்.
படத்தின் தயாரிப்பாளர் சதீஷ். இவர் வேறு யாருமல்ல, நடிகை ஷ்ரியாவின் மேனேஜர். இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
அடுத்து ஷ்ரியாவை வைத்து படம் எடுப்பாரா சதீஷ்.

03 நவம்பர் 2010

எதிர்மனுதாரராக நடிகை நயன்தாரா.

நயன்தாரா - பிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும், இருவரும் ஒன்றாக சுற்றக் கூடாது என்று கோரியும் பிரபு தேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் சம்மனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை என கூறப்பட்டது.
இதனால் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ரம்லத் வக்கீல் ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2-வது சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபுதேவாவும், நயன் தாராவும் சமீபத்தில் ரகசியமாக சென்னை வந்தனர். பிரபு தேவாவின் தந்தை சுந்தரத்தின் ஆழ்வார்பேட்டை வீட்டிலேயே இருவரும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு சம்மன் அனுப்ப வைக்கப்பட்டது. ஆனால் பிரபுதேவா அங்கு இல்லை என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
நயன்தாரா எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரது 2 வது சம்மனும் நடிகர் சங்கத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சம்மனை பெற்றுக் கொண்டனர். வழக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் நேரில் ஆஜராவார்கள் என பிரபுதேவாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 நவம்பர் 2010

திருமணம்-தபுவின் குழப்பம்!

காதல் தேசம் படத்துக்காக தாஜ் கோரமண்டலில் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் கேடி குஞ்சுமோன் (அப்போதுதான் அவருக்கு போதாத காலம் துவங்கியிருந்தது!).
பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் இப்படிக் கேட்டார்:
"ஆமா... படத்தில் கல்லூரி மாணவியாக வரும் அந்தப் பொம்பள யார்?" என்று வெள்ளந்தியாகக் கேட்டுவைக்க, நெஞ்சைப் பிடித்துக் கொள்ளாத குறையாக தவித்துப் போனார் குஞ்சுமோன்!
"அவங்க சின்னப் பொண்ணுதாங்க... பேர் தபு. இந்தில பேமஸ் ஆர்டிஸ்ட்..." என்று நீண்ட விளக்கமெல்லாம் தந்தார். ஆனால் தமிழில் தபு எடுபடவே இல்லை. இருந்தாலும் இந்தி, தெலுங்கில் தபுவுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு!
குறிப்பாக நாகார்ஜுனா ரசிகர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும்!
ஆனால் அம்மணியின் பழக்கம் நாகார்ஜூனாவோடு நிற்கவில்லை... பாலிவுட்டில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
கடைசியாக மாடலிங்கில் பிஸியாக இருக்கும் உபேன் பட்டேல் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாககக் கூட செய்திகள் வந்தன. ஆனால் இதை (இது ஒன்றை மட்டும்தான்!) தபு மறுத்தார்.
இப்போது தபுவுக்கு வயது கிட்டத்தட்ட 40!
இந்தநிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த அந்த தொழில் அதிபருடன் தபு நெருங்கிப் பழகுவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு இணைந்தே செல்வதாகவும் இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதோடு, தொழில் அதிபர் குடும்பத்தினர் தபு குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதுபற்றி தபு கூறுகையில், "இந்த ஒரு வருடத்தில் எனக்குத் திருமணம் என 5 முறை செய்திகள் வெளியாகியுள்ளன. நான் திருமணம் செய்து கொள்வேனா என்று தெரியவில்லை. அப்படியொரு உறவுக்காக நான் யாருடனும் பழகவில்லை..," என்கிறார் மையமாக!

01 நவம்பர் 2010

'பாய்ஸை' வெறுக்கும் சித்தார்த்!

பாய்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் சித்தார்த், தற்போது அந்தப் படத்தை தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படம் பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்த படமாகும். ஆனால் இப்படத்தில் நடித்த சித்தார்த், பரத், ஜெனிலியா, நகுல் ஆகியோர் இப்போது சினிமாவில் பிசியாக உள்ளனர்.
அதில் சித்தார்த் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் ஹீரோ. பரத் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், ஜெனிலியா நான்கு மொழிகள் பிசியாக உள்ள நடிகை . நகுலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படத்தில் நடித்த நான்காவது நபரான தமன் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் பாய்ஸ் படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார் சித்தார்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாய்ஸ் படத்துக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம், அந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாய்ஸ் படத்தை மறக்கவே விரும்புகிறேன்.
யாராவது என்னிடம் உனது முதல் படம் என்ன என்று கேட்டால் நுவ்வொஸ்தான்டன்டே நேநொட்டாதன்டனா (தெலுஙகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம்) படத்தைத்தான் கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.
நேரம்தான்!