அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு 'வாசனை'யான ஒரு ஐடியாவைக் கொடுத்துள்ளாராம் திரிஷா.
அஜீத்துடன் இணைந்து 'மங்காத்தா' ஆடிக் கொண்டிருக்கிறார் திரிஷா. 'மன்மதன் அம்பை' முடித்த கையோடு 'மங்காத்தா'வுக்கு வந்துள்ளதால் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார் திரிஷா. படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்துள்ளதாம். அடுத்த ஷெட்யூலுக்குத் தயாராகி வருகிறது யூனிட்.
இந்த இடைப்பட்ட கேப்பில் ட்விட்டர் மூலம் ஒரு சூப்பர் செய்தியை கொடுத்துள்ளார் திரிஷா.
அதில் திரிஷா கூறியிருப்பதாவது...
அஜீத் ஷூட்டிங்கின்போது தானே தனது கையால் தயாரித்த பிரியாணியைக் கொடுத்து அனைவரையும் அசத்தி விட்டார். உண்மையிலேயே அஜீத் மிகப் பெரிய சமையல்நிபுணர். அட்டகாசமான பிரியாணி அது. பேசாமல் உடனே ஒரு ரெஸ்டாரென்ட்டை தொடங்கி விடுங்கள் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
அதேபோல நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் கண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கும், மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் திரிஷா.
அதில், கமல்ஹாசனுக்கு எனது மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துகள். எனக்குப் பிடித்தமான சூப்பர் ஸ்டார் அவர்தான். அவருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. எனது இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடன் பணியாற்றுவது செம ஜாலியாக உள்ளது என்று கூறியுள்ளார் திரிஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக