நயன்தாரா - பிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும், இருவரும் ஒன்றாக சுற்றக் கூடாது என்று கோரியும் பிரபு தேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் சம்மனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை என கூறப்பட்டது.
இதனால் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ரம்லத் வக்கீல் ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2-வது சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபுதேவாவும், நயன் தாராவும் சமீபத்தில் ரகசியமாக சென்னை வந்தனர். பிரபு தேவாவின் தந்தை சுந்தரத்தின் ஆழ்வார்பேட்டை வீட்டிலேயே இருவரும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு சம்மன் அனுப்ப வைக்கப்பட்டது. ஆனால் பிரபுதேவா அங்கு இல்லை என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
நயன்தாரா எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரது 2 வது சம்மனும் நடிகர் சங்கத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சம்மனை பெற்றுக் கொண்டனர். வழக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் நேரில் ஆஜராவார்கள் என பிரபுதேவாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக