ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ள குஸாரிஷ் படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போல நடித்திருக்கும் காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரோஷனும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ள இப்படம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரோஷனுடன் சேர்ந்து ஐஸ்வர்யா புகை பிடிப்பது போல காட்சி வருகிறது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குஸாரிஷ் படத்தில் வரும் காட்சிகள் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண் களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது.
நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன்.
உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன் என்றார் ஐஸ்வர்யா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக