காதல் தேசம் படத்துக்காக தாஜ் கோரமண்டலில் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் கேடி குஞ்சுமோன் (அப்போதுதான் அவருக்கு போதாத காலம் துவங்கியிருந்தது!).
பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் இப்படிக் கேட்டார்:
"ஆமா... படத்தில் கல்லூரி மாணவியாக வரும் அந்தப் பொம்பள யார்?" என்று வெள்ளந்தியாகக் கேட்டுவைக்க, நெஞ்சைப் பிடித்துக் கொள்ளாத குறையாக தவித்துப் போனார் குஞ்சுமோன்!
"அவங்க சின்னப் பொண்ணுதாங்க... பேர் தபு. இந்தில பேமஸ் ஆர்டிஸ்ட்..." என்று நீண்ட விளக்கமெல்லாம் தந்தார். ஆனால் தமிழில் தபு எடுபடவே இல்லை. இருந்தாலும் இந்தி, தெலுங்கில் தபுவுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு!
குறிப்பாக நாகார்ஜுனா ரசிகர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும்!
ஆனால் அம்மணியின் பழக்கம் நாகார்ஜூனாவோடு நிற்கவில்லை... பாலிவுட்டில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
கடைசியாக மாடலிங்கில் பிஸியாக இருக்கும் உபேன் பட்டேல் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாககக் கூட செய்திகள் வந்தன. ஆனால் இதை (இது ஒன்றை மட்டும்தான்!) தபு மறுத்தார்.
இப்போது தபுவுக்கு வயது கிட்டத்தட்ட 40!
இந்தநிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த அந்த தொழில் அதிபருடன் தபு நெருங்கிப் பழகுவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு இணைந்தே செல்வதாகவும் இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதோடு, தொழில் அதிபர் குடும்பத்தினர் தபு குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதுபற்றி தபு கூறுகையில், "இந்த ஒரு வருடத்தில் எனக்குத் திருமணம் என 5 முறை செய்திகள் வெளியாகியுள்ளன. நான் திருமணம் செய்து கொள்வேனா என்று தெரியவில்லை. அப்படியொரு உறவுக்காக நான் யாருடனும் பழகவில்லை..," என்கிறார் மையமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக