தந்தை விஜயகுமார் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக மகள் வனிதா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜயகுமார் குடும்ப விவகாரம், பல வில்லங்கங்களை வெளிக் கொணர ஆரம்பித்துள்ளது.
விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண்குமார் ஆகியோர் தன்னை கடுமையாகத் தாக்கியதாக போலீசில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மூவரையும் கைது செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை 11.30 மணிக்கு குழந்தைகள் ஜோவிகா (வயது 7), ஜெய்னிதா (2 1/2 வயது) ஆகியோரை அழைத்துக்கொண்டு வனிதா சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு டி.ஜி.பி. லத்திகா சரணை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் டி.ஜி.பி. அலுவலகம் வெளியே ரோட்டில் நின்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "தீபாவளி பண்டிகை அன்று மகன் விஜய ஸ்ரீஹரியை என் தந்தை விஜயகுமார் வீட்டுக்கு அழைத்து போனேன். பிறகு அவனை திரும்ப அழைத்து சென்றபோது விஜயகுமாரும், அருண் விஜய்யும் தடுத்தனர். மகனை என்னோடு அனுப்ப மறுத்தார்கள். எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அருண்விஜய் காலால் என்னை எட்டி உதைத்தார். கொலை மிரட்டலும் விடுத்தார்.
இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்தேன். அருண்விஜய் மீது வன் கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினேன். 7ம் தேதி அன்று இந்த புகாரை அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
என் தந்தை விஜயகுமார் 15ம் தேதி என்னுடைய கணவர் ஆனந்தராஜ், அவரது கையை முறுக்கி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீது ஆனந்தராஜை கைது செய்து விட்டனர். விஜயகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி என் கணவரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். மகன் அருண் விஜய்யை காப்பாற்ற மகள் என்றும் பாராமல் என் மேல் புகார் அளித்துள்ளார்.
எனது முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விஜய ஸ்ரீஹரியை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மூன்றரை வருடம் போராடி மீட்டு வந்தேன். அப்போது எனது தந்தை எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எதிர்காலத்தில் எனது மகனால் சொத்துக்கு பிரச்சினை வரும் என்று கருதி அவனை தன்னோடு வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
இவர்களின் சொத்தும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். இவர்கள் உறவே எனக்கு வேண்டாம்.
நாறிப் போய்விடும்....
என் தந்தை விஜயகுமார் பற்றி நிறைய ரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்.
ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திணறினார்கள். என் கணவர்தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
விஜய்குமார் வீட்டில் எவ்வளவோ அசிங்கங்கள் நடக்கின்றன. சட்டவிரோதமான பல காரியங்கள் நடக்கின்றன. இவற்றை வெளியில் சொல்லத்தான் போகிறேன். அப்போது இவர்கள் கதை நாறப் போகிறது.
அருண் விஜய் ஸ்டண்ட் பயிற்சி எடுத்துள்ளார். அவர் போயும் போயும் ஒரு பெண்ணிடத்தில் தைரியத்தை காட்டுகிறார். விஜயகுமார் மீடியா என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்துள்ளேன். அது அருண் விஜய்க்கு பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் என்னை அடிக்கிறார்.
இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு முக்கிய காரணம் என் தங்கை ப்ரீதாவும், அவள் கணவர் இயக்குநர் ஹரியும்.
மதுரவாயல் போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவேதான் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளேன். டி.ஜி.பியும் ஒரு பெண் என்பதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று கருதுகிறேன்.
விஜயகுமார் குடும்பத்தினர் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றனர். அது நடக்காது. தற்கொலை செய்ய நான் கோழையல்ல. துணிச்சலாக நின்று ஜெயித்து காட்டுவேன்..." என்றார் வனிதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக