பக்கங்கள்

28 நவம்பர் 2010

சம்பள பாக்கி.. நடிகை சங்கீதா புகார்!

தம்பிக்கோட்டை படத்தில் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தராமல் ஏமாற்றுவதாக நடிகை சங்கீதா புகார் கூறியுள்ளார்.
நரேன், பூனம் பாஜ்வா, பிரபு, மீனா என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் படம் தம்பிக்கோட்டை.
இப்படத்தில் வில்லியாக சங்கீதா நடிக்கிறார். இந்த படத்தில் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக சங்கீதா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
தனது புகாரில், "தம்பிக்கோட்டை படம் முடிந்துவிட்டது. இதில் எனக்கு ரூ.3.5 லட்சம் சம்பள பாக்கி உள்ளது. ஒப்பந்தப்படி கடந்த பிப்ரவரி மாதமே இந்த பணத்தை தந்திருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றி விட்டனர். இறுதிநாள் படப் பிடிப்பில் சம்பள பாக்கிக்காக செக் கொடுத்தார்கள். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அதன் பிறகு பலமுறை பணம் கேட்டு தொடர்பு கொள்ள முயன்றேன். பொருட்படுத்தவே இல்லை.
எனவே எனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தொகையை நடிகர் சங்கம் தலையிட்டு வாங்கி கொடுக்க வேண்டுகிறேன்..." என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த புகாரைப் பரிசீலித்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக