பக்கங்கள்

01 நவம்பர் 2010

'பாய்ஸை' வெறுக்கும் சித்தார்த்!

பாய்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் சித்தார்த், தற்போது அந்தப் படத்தை தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படம் பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்த படமாகும். ஆனால் இப்படத்தில் நடித்த சித்தார்த், பரத், ஜெனிலியா, நகுல் ஆகியோர் இப்போது சினிமாவில் பிசியாக உள்ளனர்.
அதில் சித்தார்த் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் ஹீரோ. பரத் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், ஜெனிலியா நான்கு மொழிகள் பிசியாக உள்ள நடிகை . நகுலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படத்தில் நடித்த நான்காவது நபரான தமன் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் பாய்ஸ் படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார் சித்தார்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாய்ஸ் படத்துக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம், அந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாய்ஸ் படத்தை மறக்கவே விரும்புகிறேன்.
யாராவது என்னிடம் உனது முதல் படம் என்ன என்று கேட்டால் நுவ்வொஸ்தான்டன்டே நேநொட்டாதன்டனா (தெலுஙகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம்) படத்தைத்தான் கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.
நேரம்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக