பக்கங்கள்

31 அக்டோபர் 2010

வில்லன் தொல்லை தருகிறார்-நாயகி பாக்யாஞ்சலி!

உன்னைக் காதலிக்கிறேன் படத்தில் வில்லனாக நடித்த வேலு என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூறி தொடர்ந்து தொல்லை தருவதாக அப்படத்தின் நாயகி பாக்யாஞ்சலி புகார் கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் பாக்யாஞ்சலி. இவரது ஒரிஜினல் பெயர் அஞ்சலியாம். இவர் நெல்லு படத்தின் மூலம் நடித்து அறிமுகமானவர். தற்போது உன்னைக் காதலிக்கிறேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்தவர் வேலு.
இந்த வேலு தற்போது தனக்கு பல்வேறு வகையில் தொல்லை தந்து வருவதாக பாக்யாஞ்சலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார் பாக்யாஞ்சலி. இதுகுறித்து விசாரிக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் வந்தார் பாக்யாஞ்சலி அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் வேலுவின் வீடு உள்ள புரசைவாக்கத்திற்குப் போலீஸார் பாக்யாஞ்சலியுடன் சென்றனர். ஆனால் வேலு அங்கு இல்லை.
இதையடுத்து வேலுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர் போலீஸார்.
கடந்த ஆண்டு சினிமாப் படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தபோதுதான் பாக்யாஞ்சலியை சந்தித்துள்ளார் வேலு. அப்போதே கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அதை பாக்யாஞ்சலி மறுத்து விட்டார். இனிமேல் இப்படிப் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் வேலு விடாமல் தொடர்ந்து பாக்யாஞ்சலியை அனத்தி வந்துள்ளார். பாக்யாஞ்சலி ஷூட்டிங்குக்காக போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து போயுள்ளார். எஸ்.எஸ்.எம். அனுப்புவது என்று இறங்கியுள்ளார். தொல்லை தொடர்ந்ததால், போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பாக்யாஞ்சலி.
இதுகுறித்து பாக்யாஞ்சலி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் வேலுவிடம் நட்புடன் பழகினேன். ஆனால் அவர் தன்னுடன்தான் பேச வேண்டும், பழக வேண்டும், செல்போனில் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
எங்கு போனாலும் தொல்லை தருகிறார். எனது கைப் பையை பறித்துக் கொண்டு அதிலிருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டார்.
வேலு வீட்டில் இல்லை என்றும் எனவே அந்த பையை எடுத்துத் தருவதாகவும் அவரது வீட்டுக்கு வேலுவின் உறவுப் பெண் ஒருவர் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு மறைந்திருந்த வேலு என்னை அடித்து அறை ஒன்றில் அடைத்து வைத்தார். மேலும், என்னிடம் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
அவரை திருமணம் செய்ய வேண்டுமென்றும், படங்களில் அவருடன் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றும், ரூ.15 லட்சம் அவரிடம் நான் கடன் வாங்கியது போலவும் ஆவணங்களை தயார் செய்துள்ளார். மேலும் அவருக்கு நான் முத்தம் கொடுத்தது போன்ற வீடியோ படமும் எடுத்து வைத்துள்ளார்.
அதை பத்திரிகையில் கொடுத்து என்னை கேவலப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாக்யாஞ்சலி.

30 அக்டோபர் 2010

மதுஷாலினி நடிக்கும் அவன் இவன்.

பாலாவின் அவன் இவன் படத்தில் இன்னொரு நாயகியாக மது ஷாலினி நடிக்கிறார்.
அவன் இவன் படத்தை 6 மாதங்களுக்குள் முடித்துவிடுவதாக பாலா கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்திருந்தாலும், வழக்கம் போல தாமதம் தவிர்க்க முடியாமல் தொடர்கிறது.
தேனியில் படமாகி வரும் அவன் இவனில் ஆர்யா, விஷால் நடிப்பதும், நாயகியாக ஜனனி நடிப்பதும் தெரிந்த சங்கதி.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயினாக மது ஷாலினி நடிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகி வருகிறது அவன் இவன். தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மது ஷாலினி. ஓரிரு தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இரு பாடல்களை இளையராஜா பாடியுள்ளார்.

29 அக்டோபர் 2010

ரசியுங்கள்,பாலாபிஷேகம் வேண்டாம்.

ரசிகர்கள் திரைப்படங்களை ரசித்து மகிழலாம், ஆனால் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம், என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறினார்.
திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "இன்று தமிழ்நாட்டில் தமிழ் பற்று கொண்டு ஆவேசமாக பேசினால் துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தேர்தலை முன் வைத்து தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குகிறார்கள். இதனால் அண்ணன்- தம்பி உறவுகூட பிரிக்கப்படுகிறது.
போராட்ட உணர்வை இழந்ததால் கச்சத்தீவை இழந்தோம். சேது சமுத்திர திட்டத்தை ஒருமித்த குரலாக நம்மால் நிறைவேற்ற முடிய வில்லை. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை போல் தமிழக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
சினிமா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல. ரசிகர்கள் சினிமாவை ரசிக்கட்டும். ஆனால் பாலாபிஷேகமெல்லாம் வேண்டாம்.
காவிரிப் பிரச்சினை தீர, கருணாநிதி , ஜெயலலிதா, விஜய்காந்த் போன்ற தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி, பிரதமரைச் சந்தித்து பிரச்சினையை வலியுறுத்த வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளின் பிரச்சினைக்கு சரியான தீர்வு", என்றார்.
அப்போது, ஒரு நிருபர், நதிநீர் இணைப்புக்கு ரூ 1 கோடி தருவதாக ரஜினிகாந்த் கூறினாரே, அது என்ன ஆயிற்று? என்றார்.
உடனே தங்கர் பச்சான், "எதுவும் நடக்கப் போவதில்லை என்பதால் அவர் அமைதியாகிவிட்டாரோ என்னவோ..", என்றார்.

27 அக்டோபர் 2010

நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்!

நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.
அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சி க்கு விமானத்தில் சென்றனர்.
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.
அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.
நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.
இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு 'செல்போன்' மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை 'மீட்க' திருச்சிக்கு விரைந்தார்கள்.
நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
பிதா மகன் ஸ்டைலில்...
பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.
நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

25 அக்டோபர் 2010

உதயநிதியுடன் நடிக்க நயன்தாரா மறுப்பு?

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் நயனதாரா என்கிறார்கள்.
ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் உதயநிதி.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ராஜேஷ்தான், உதயநிதியை ஹீரோவாக்குகிறார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் உதயநிதி.
தற்போது உதயநிதிக்கு ஜோடி தேடிக் கொண்டிருக்கிறார்கள். நயனதாராவைக் கேட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் அவர் சரி என்று சொல்ல மறுத்து விட்டாராம். மேலும், இப்படத்தில் நடிக்கும் ஆர்வத்திலும் அவர் இல்லையாம். அவர் தற்போது வேறு மாதிரியான சூழலில் சிக்கியிருப்பதால் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.
இருந்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறாராம் ராஜேஷ். அதேசமயம், வேறு நாயகிகள் குறித்தும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.
இப்படத்திற்கு நண்பேன்டா என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தை தலைப்பாக்கலாம் என்று தெரிகிறது.

23 அக்டோபர் 2010

4 படங்களில் நாயகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டேன் – ஐஸ்வர்யாராய்.

இருவர்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யாராய்.
ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன்” நான்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி விட்டதாக ஐஸ்வர்யாராய் கூறினார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ் படங்களில் நடிக்க எனக்கு மொழி பிரச்சி னையாக இல்லை. இருவர், ஜீன்ஸ் படங்களில் நடித்த போது கொஞ்சம் சிரமம் இருந்தது. இப்போது இல்லை. தமிழ் படத்தில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறது. வசனங்களை புரிந்து கொண்டு தான் பேசுவேன்.
இருவர்” படத்தில் நடித்த போது புதுமுகமாகத் தான் இருந்தேன். இப்போது நிறைய அனுபவங்கள் கிடைத்து உள்ளது. நிறைய மொழி பேசும் மக்களை சந்தித்து விட்டேன். எல்லா மொழிகளுக்கும் மரியாதை கொடுக்கிறேன்.
ரஜினி எனக்கு ஆச்சரிய மாக தெரிகிறார். அவர் சூப்பர் ஸ்டார் ஆனாலும், அடக்கமாக இருக்கிறார். எளிமையாக தெரிகிறார். எல்லோரிடத்திலும் அன் பாக பழகுகிறார். அவருடன் “எந்திரன்” படத்தில் நடித் தது சந்தோஷ மாக இருக்கிறது.
எந்திரன் படத்தில் நடிப்பதற்கு நான் கஷ் டப்பட வில்லை. ஈஸியாக நடித்து இருந்தேன். ஆனால் இப்படம் எனது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனை படமாகும்.

21 அக்டோபர் 2010

நீதுவிற்கு கிடைக்குமா தமன்னா இடம்?

தீராத விளையாட்டு பிள்ளை நீது சந்திரா கைவசம் ஆதிபகவன் எனும் அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் மட்டுமே இருக்கிறது. தேடி வந்த அஜீத்தின் மங்காத்தா வாய்ப்பு கைநழுவி போய் விட்டாலும், அம்மணிக்கு தமிழ் சினிமாவில் தமன்னா இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.

அதனால் தனியாக தமிழ் ஆசிரியர் வைத்துமும்பையில் உள்ள தன் வீட்டில் தமிழ் கற்று வருகிறாராம் நீது. அமீரின் அதிபகவன் அந்த இடத்தை தமிழில் தனக்கு பெற்றுத் தரும்போது, தானே தமிழில் டப்பிங் பேச வேண்டும் என்பதும் அம்மணியின் ஆசையாம்.
நீதுவின் ஆசை பேராசை என்றாலும் தமிழ் மொழியை விரும்பி கற்கும் நடிகை என்பதால் நிறைவேற வாழ்த்துவோம்!.

20 அக்டோபர் 2010

அரைகுறை ஆடை… நசுக்கிய ரசிகர்கள்… கோபத்தில் ஸ்ரேயா!!

பொது இடங்களில் மிகமிகக் குறைச்சலான உடையில்தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போலிருக்கிறது.
ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் தம்மாத்துண்டு உடையோடு மேடையேறி, ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா.
ஆனாலும் அம்மணி தனது உடை விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக கஞ்சத்தனம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது.
விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவுதான்… நெருக்கித் தள்ளியபடி ஸ்ரேயாவை சூழ்ந்தனர் ரசிகர்கள்.
விழா ஏற்பாட்டாளர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
கூட்டத்தில் சிக்கிய ஸ்ரேயாவை சிலர் இழுக்கவும் கிள்ளவும் முயன்றனர். அவர்கள் பிடியில் தவித்தார் ஸ்ரேயா. ஒரு வழியாக விழா அமைப்பாளர்கள் ரசிகர்களை தள்ளி விட்டு ஸ்ரேயாவை மீட்டனர்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத ஸ்ரேயா, திட்டிக் கொண்டே விழாவிலிருந்து பாதியில் வெளியேறினார்.

19 அக்டோபர் 2010

19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (54). முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர் கென்யாவில் தங்கியுள்ளார். இவர் அதிபர் ஒபாமா தந்தையின் முதல் மனைவியின் மகன் ஆவார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது 3-வது மனைவியாக 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பள்ளி மாணவியான இவர் திருமணத்துக்கு பின் தன் படிப்பை நிறுத்தி விட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மாலிக் ஒபாமாவை இவர் திருமணம் செய்ய முயன்றார். அதற்கு அவரின் தாயார் மேரி அகோ ஒயூமோ அனுமதி அளிக்கவில்லை. தற்போது அனுமதி கொடுத்ததின் பேரில் அவரை திருமணம் செய்துள்ளார்.
கென்யாவில் ஒருவர் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போது மாலிக் ஒபாமா திருமணம் செய்துள்ள பள்ளி மாணவிக்கும் இவருக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

17 அக்டோபர் 2010

ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்!

நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீளமானது. அதில் இணையாவிட்டால் அவர்களை ஒருமாதிரியாக பார்க்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அக்கவுண்ட் வைத்திருக்கும் தென்னிந்தியப் பிரபலங்களில் திரிஷாவும் ஒருவர். ஆனால் அவரது பேஸ்புக் அக்கவுண்டை சில விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் திரிஷா. நேற்று காலை திரிஷாவின் பேஸ் புக் பக்கத்திற்குச் சென்ற அவரது நட்பு வட்டாரம், அது பிளாக் ஆகிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தனது தளம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திரிஷா உடனடியாக வேறு ஒரு அக்கவுண்ட்டைத் தொடங்கியுள்ளார். இதையாவது யாரும் நோண்டாமல் இருக்க வேண்டுமே என்று புலம்பி வருகிறாராம் திரிஷா.
சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் ட்விட்டர் தளத்திற்குள் சிலர் ஊடுறுவி விஷமம் செய்தது நினைவிருக்கலாம்.

13 அக்டோபர் 2010

அகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்!

ஆஹா ஓஹோவென ஓடும் என எதிர்பார்த்து வரலாற்று படம் எடுத்து மண்ணை கவ்விய செல்வமான டைரக்டரும், அவரது காதல் மனைவி அகர்வாலும் விவாகரத்து செய்து விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
விவாகரத்து முடிந்த கையோடு விதவிதமான லேட்டஸ்ட் ஸ்டில்களை எடுத்து, இன்னமும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்று தண்டோரோ போடத குறையாக அம்மணி எல்லா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஸ்டில்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார்.
அகர்வாலின் அழகை பார்த்து மயங்கிய பலரும் தங்களது படத்தில் நடிக்க அழைத்தாலும், விரல் நடிகரின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டினார் அகர்வால். படத்தில் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சிம்பு கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்திருக்கிறார் அகர்வால்.
இதுஒருபுறம்மென்றால்… இந்த அர்வாலால் முன்னணி இளம் ஹீரோக்கள் 2 பேர் ஒருவர் மீது ஒருவர் ‌செம கடுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. விரல் நடிகரும், உச்ச நடிகரின் மருமகனும்தானாம்.
தனது அண்ணனின் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று மருமகன் நடிகர் கூறி வருகிறாராம்.
ஆனால் விரல் தரப்போ… படத்தில் பெரிய காஸ்டிங் தேவைப்பட்டதால் அகர்வாலை ‌போட்டிருக்கிறோம், என்று கூறியதுடன் மருமகன் மீது கடுப்பில் இருக்கிறதாம்.

11 அக்டோபர் 2010

துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி நீது சந்திரா காயம்!

அமீர் இயக்கும் ஆதி பகவன் படப்பிடிப்பின் போது துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி சென்றதால் நடிகை நீத்து சந்திரா காயம் அடைந்தார்.
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடிக்கும் படம் ஆதிபகவன். அமீர் இயக்குகிறார். திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த போது விபத்து ஏற்பட்டு நீது சந்திரா காயம் அடைந்தார்.
அவர் உதட்டில் துப்பாக்கி குண்டு உராய்ந்து சென்றது. ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து பற்றி நீது சந்திரா கூறுகையில், “ஆதிபகவன் படத்தில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. தாய்லாந்து துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் காரில் இருந்து இறங்கி கப்பலை நோக்கி செல்வது போன்று காட்சி எடுத்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடப்பது போல் சீன்கள் வைத்து இருந்தனர்.
ஷாட் ஓகே சொன்னதும் காரில் இருந்து இறங்கி நடந்தேன். அப்போது ஒரு குண்டு என்னை நோக்கி வந்தது. நான் விலகினேன். ஆனாலும் என் உதட்டில் உராய்ந்தபடி சென்றது. இதனால் உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் வலி தாங்க முடியாமல் அழுதேன். பார்வை மங்கியது. உடனடியாக முதலுதவி சிகிச்சசை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். இப்போது ஓய்வில் உள்ளேன்”, என்றார்.

08 அக்டோபர் 2010

நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க எதிர்ப்பு!

பிரபுதேவாவுடன் கள்ளக்காதல் கொண்டுள்ள நடிகை நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த வேடத்தில் மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம்.
தெலுங்கு இயக்குநர் பாபு, என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை வைத்து ஸ்ரீராம ஜெயம் என்ற புராணப் படத்தை இயக்கவுள்ளார். இதில் பாலகிருஷ்ணா ராமராக நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளனர்.
இந்தநிலையி்ல் பிரபுதேவா- நயனதாரா கள்ளக்காதல் குறித்து பிரபுதேவாவின் மனைவி ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்கக் கூடாதுஎன்று அவர்கள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு, அழகாக குடும்பம் நடத்தி வருபவரும், குடும்பப் பாங்கான முகம் கொண்டவருமான மாதுரி தீட்சித்தை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தீர்மானித்து அவரை அணுகியுள்ளாராம் இயக்குநர் பாபு.

07 அக்டோபர் 2010

ர‌ஜினியின் கடவுள்கள்!

ர‌ஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ர‌ஜினியின் கடவுள் யார்?
ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ர‌ஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.
மும்பைக்கு ரோபோ பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த ர‌ஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.
தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.
பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ர‌ஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதி‌ரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் ர‌ஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ரா‌ஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டிய‌ர், அவரது கடவுள் பால் தாக்கரே.
துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போ‌ஜ்பு‌ரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்… ர‌ஜினியின் மேலும் சில கடவுள்களை தெ‌ரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.

04 அக்டோபர் 2010

கதை பிடித்தால்தான் நடிப்பேன் – தமன்னா!

எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், சிக் நாயகிகளில் முக்கியமானவருமான தமன்னா கை நிறையப் படங்களுடன் நம்பர் ஒன் நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னணியில் இருந்தாலும் கூட அதிக படங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு நடித்துக் குவிக்க தான் விரும்பவில்லை என்றும் நல்ல ரோல்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறுகிறார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
கல்லூரி படத்தில் நடித்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கல்லூரிப் படத்தில் நடித்தபோது நான் மேக்கப் கூட போடவில்லை. இயல்பான தோற்றத்திலேயே நடித்தேன். அந்தப் படம் முழுக்க வெளிப்புறப்படப்பிடிப்புதான். அதுபோன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார் தமன்னா.
பரவாயில்லை, சதையை நம்பும் நாயகிகளுக்கு மத்தியில் கதையை நம்பும் தமன்னா வித்தியாசமானவர்தான்.

02 அக்டோபர் 2010

அனுஷ்காவின் உயரம் அளந்த சிம்பு...

சிம்பு, பரத் இணைந்து நடித்துள்ள ‘வானம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரெடக்‌ஷன் வேலை தொடங்குவதற்கு முன் அப்படியே ஒரு பிரஸ் மீட் வைத்துவிடலாமே என்ற எண்ணத்தில், அதற்கான ஏற்பாட்டையும் கச்சிதமாய் செய்திருந்தனர் வானம் படக்குழுவினர்.
இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்... சிலம்பரசன், பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கிரிஷ், தயாரிப்பாளர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
அனைத்து மீடியாக்களின் பார்வையும் சிம்பு, அனுஷ்கா மீதுதான்...
தெலுங்கு ‘வேதம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அதன் ரீமேக்தான் வானம் என்பதால், இதில் அனுஷ்காவை எப்படியும் நடிக்கவைத்தே ஆகவேண்டும் என பகீரத முயற்சியெல்லாம் செய்தார் சிம்பு. இது போக ‘நான் அனுஷ்காவின் ரசிகன்’ என்று வேறு சொல்லிவரும் சிம்புவிடம் அது பற்றி கேட்டதற்கு...
"நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகனாகவும் மாறமாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன். 'அருந்ததி' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகனாக மாறிவிட்டேன்.
பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகனாக மாறினேன்” என்றார் சிம்பு.
இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, அனுஷ்கா உயரமானவர் ஆச்சே, அவர்கூட நீங்க சேர்ந்து நடிச்சா பொருத்தமாக இருக்குமா?... அப்படி கேட்டதுதான் தாமதம்...
"அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சிம்புவிடமிருந்து பதில் அம்பாக வெளிப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அனுஷ்காவையும் அழைத்து பக்கத்தில் நின்று அளந்து காட்டினார். (சிம்பு அனுஷ்காவைவிட கொஞ்சம் உயரம்போல்தான் தெரிந்தது...)
கடைசியாக ஒரு கேள்வி, இந்தப் படத்தில் பரத்துடன் நடித்தது போல, தனுஷுடன் நடிப்பீர்களா?...
“தனுஷுடன் மட்டுமல்ல நான் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை" என வெளிப்படையாக பேசினார். அதுதானே சிம்பு.