பக்கங்கள்

31 அக்டோபர் 2010

வில்லன் தொல்லை தருகிறார்-நாயகி பாக்யாஞ்சலி!

உன்னைக் காதலிக்கிறேன் படத்தில் வில்லனாக நடித்த வேலு என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூறி தொடர்ந்து தொல்லை தருவதாக அப்படத்தின் நாயகி பாக்யாஞ்சலி புகார் கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் பாக்யாஞ்சலி. இவரது ஒரிஜினல் பெயர் அஞ்சலியாம். இவர் நெல்லு படத்தின் மூலம் நடித்து அறிமுகமானவர். தற்போது உன்னைக் காதலிக்கிறேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்தவர் வேலு.
இந்த வேலு தற்போது தனக்கு பல்வேறு வகையில் தொல்லை தந்து வருவதாக பாக்யாஞ்சலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார் பாக்யாஞ்சலி. இதுகுறித்து விசாரிக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் வந்தார் பாக்யாஞ்சலி அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் வேலுவின் வீடு உள்ள புரசைவாக்கத்திற்குப் போலீஸார் பாக்யாஞ்சலியுடன் சென்றனர். ஆனால் வேலு அங்கு இல்லை.
இதையடுத்து வேலுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர் போலீஸார்.
கடந்த ஆண்டு சினிமாப் படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தபோதுதான் பாக்யாஞ்சலியை சந்தித்துள்ளார் வேலு. அப்போதே கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அதை பாக்யாஞ்சலி மறுத்து விட்டார். இனிமேல் இப்படிப் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் வேலு விடாமல் தொடர்ந்து பாக்யாஞ்சலியை அனத்தி வந்துள்ளார். பாக்யாஞ்சலி ஷூட்டிங்குக்காக போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து போயுள்ளார். எஸ்.எஸ்.எம். அனுப்புவது என்று இறங்கியுள்ளார். தொல்லை தொடர்ந்ததால், போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பாக்யாஞ்சலி.
இதுகுறித்து பாக்யாஞ்சலி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் வேலுவிடம் நட்புடன் பழகினேன். ஆனால் அவர் தன்னுடன்தான் பேச வேண்டும், பழக வேண்டும், செல்போனில் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
எங்கு போனாலும் தொல்லை தருகிறார். எனது கைப் பையை பறித்துக் கொண்டு அதிலிருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டார்.
வேலு வீட்டில் இல்லை என்றும் எனவே அந்த பையை எடுத்துத் தருவதாகவும் அவரது வீட்டுக்கு வேலுவின் உறவுப் பெண் ஒருவர் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு மறைந்திருந்த வேலு என்னை அடித்து அறை ஒன்றில் அடைத்து வைத்தார். மேலும், என்னிடம் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
அவரை திருமணம் செய்ய வேண்டுமென்றும், படங்களில் அவருடன் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றும், ரூ.15 லட்சம் அவரிடம் நான் கடன் வாங்கியது போலவும் ஆவணங்களை தயார் செய்துள்ளார். மேலும் அவருக்கு நான் முத்தம் கொடுத்தது போன்ற வீடியோ படமும் எடுத்து வைத்துள்ளார்.
அதை பத்திரிகையில் கொடுத்து என்னை கேவலப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாக்யாஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக