பக்கங்கள்

25 அக்டோபர் 2010

உதயநிதியுடன் நடிக்க நயன்தாரா மறுப்பு?

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் நயனதாரா என்கிறார்கள்.
ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் உதயநிதி.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ராஜேஷ்தான், உதயநிதியை ஹீரோவாக்குகிறார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் உதயநிதி.
தற்போது உதயநிதிக்கு ஜோடி தேடிக் கொண்டிருக்கிறார்கள். நயனதாராவைக் கேட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் அவர் சரி என்று சொல்ல மறுத்து விட்டாராம். மேலும், இப்படத்தில் நடிக்கும் ஆர்வத்திலும் அவர் இல்லையாம். அவர் தற்போது வேறு மாதிரியான சூழலில் சிக்கியிருப்பதால் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.
இருந்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறாராம் ராஜேஷ். அதேசமயம், வேறு நாயகிகள் குறித்தும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.
இப்படத்திற்கு நண்பேன்டா என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தை தலைப்பாக்கலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக