மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.
விலங்குகள் மற்றும் மனிதர்களிடமும் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த பக்கவிளைவுகளையும் இது ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஆயுளை மேலும், மேலும் நீடிக்க இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் பின்விளைவுகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக