தர்மபுரி மாவட்டம் ஏ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் முருகனின் மனைவி தனலட்சுமி. முருகன் இறந்து விட்டார். தனலட்சுமி நாதஸ்வர வித்வான். இவர் பெங்களூர் சென்று விட்டு மாலை 6-30 மணிக்கு தர்மபுரிக்கு வந்தார். தனலட்சுமியை உறவினர் வினோத்குமார் தர்மபுரி பஸ்நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் காட்டுப்பகுதியில் மதுகுடித்து விட்டு உல்லாசமாக இருந்தனர்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் 2 போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை பார்த்ததும் அவர்களிடம் தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்து மிரட்டினர். தனலட்சுமியை தங்களுடன் வருமாறு அழைத்தனர். இதற்கு வினோத்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே வினோத்குமாரை தாக்கினார்கள். பின்னர் போலீஸ்காரர்கள் இருவரும் தனலட்சுமியை கற்பழிக்க முயன்றனர். அந்த நேரத்தில் வினோத்குமார் தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். உடனே வக்கீல் சிலருடன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது வக்கீலுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தனலட்சுமி தப்பி ஓடினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய தனலட்சுமியை மீட்டு தர்மபுரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீசாரை தேடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக