பக்கங்கள்

02 ஜனவரி 2011

லெனின் வல்லுறவுக்கு முயன்றார் என்கிறார் ரஞ்சிதா!

நித்தியானந்தாவின் அந்தரங்க செயலை அம்பலப்படுத்திய அவரது முன்னாள் சீடரும், டிரைவருமான லெனின் கருப்பன், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும், அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தான் தப்பித்ததாகவும் நடிகை ரஞ்சிதா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூர் அருகே, ராம்நகர் காவல் நிலையத்தில் அவர் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுடன் படுக்கை அறையில் பல்வேறு சேவைகள் (வீடியோ வெளியானதும், அதில் ரஞ்சிதா செய்தவை எல்லாம் சேவை என்று கூறியிருந்தார் நித்தியானந்தா) குறித்த வீடியோவை லெனின் கருப்பன் அம்பலப்படுத்தினார். இதையடுத்து நித்தியானந்தாகவும், ரஞ்சிதாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் நித்தியானந்தாவை ஒரு மாத தேடலுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்தனர் கர்நாடக போலீஸார். ஆனால் ரஞ்சிதா மட்டும் ஆளையே காணவில்லை.
இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்குப் பின்னர் திடீரென வெளியுலகத்திற்கு வந்தார் ரஞ்சிதா. பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கூறினார். அத்தோடு நில்லாமல் லெனின் கருப்பன் மீதும் பல்வேறு புகார்களையும் அவர் அடுக்கினார்.
மேலும் ராம்நகர் காவல் நிலையத்திலும் ஒரு புகார் கொடுத்துள்ளார் ரஞ்சிதா.
அதில், 2010ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி லெனின் என்னிடம் வந்து, சில வீடியோக்களைக் காட்டினார். அதில் ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பிரம்ச்சாரினிகளை அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதன் வீடியோ காட்சிகளாகும்.
மேலும், என்னைப் போல ஒரு பெண், நித்தியானந்தாவைப் போன்று தோற்றமளித்த ஒருவருடன் காணப்படும் வீடியோவையும் காட்டினார்.
மேலும் அவர் என்னை ஒரு முறை கற்பழிக்கவும் முயன்றார். ஆனால் நான் கூச்சல் போடவும் அக்கம் பக்கத்தில்இருந்தோர் வந்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
பின்னர் என்னை மிரட்டிய அவர் புகைப்படங்கள், வீடியோக்களை மீடியாவிடம் கொடுக்கப் போவதாக மிரட்டினார் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.
கற்பழிப்பு முயற்சி என்பது மிகப் பெரிய குற்றச் செயல். ஆனால் லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயன்றதாக தற்போது கூறும் ரஞ்சிதா, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்பது தெரியவில்லை. அவரும் இதுகுறித்து விளக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக