பக்கங்கள்

13 ஜனவரி 2011

த்ரிஷா வேண்டாம் ரஜனி ரசிகர்கள் எதிர்ப்பு.

ரஜினியின் ஹரா படத்தின் பெயர் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கான வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
ஹராவின் மீதிப் பகுதியை இயக்குபவர் கே எஸ் ரவிக்குமார்தான் என்பது உறுதியாகிவிட்டதால், அவர் இயக்கும் போர்ஷனில் இன்னொரு ஹீரோயினையும் சேர்க்கிறார்களாம்.
ஏற்கெனவே சௌந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் ரஜினிக்கு விஜயலட்சுமி ஜோடி. நிஜமான ரஜினிக்கு இன்னொரு ஜோடி என கதை மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பாத்திரத்துக்கு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்யப்போவதாக சில தினங்களாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் விஷயம் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள், 'த்ரிஷா வேண்டவே வேண்டாம்' என எதிர்ப்பு எஸ்எம்எஸ், இமெயில்கள் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். 'வித்யா பாலன், தீபிகா படுகோன் அல்லது ஐஸ்வர்யா ராய் நடிக்கட்டும். சிவாஜி பட நாயகி ஸ்ரேயா கூட ஓகே. ஆனால் த்ரிஷா மட்டும் வேண்டாம்' என்பது அந்த எஸ்எம்எஸ்ஸின் சாரம்.
த்ரிஷா மீது அப்படி என்ன கடுப்போ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக