பக்கங்கள்

27 ஜனவரி 2011

இளவயதில் தாத்தாவாகிறார் இளைஞர்!

இங்கிலாந்தை சேர்ந்தவர் தலே ரைட். இவர் தனது 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலேயே மிக குறைந்த வயதில் தந்தை ஆனார் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. இவரது 14 வயது மகள் 15 வயது காதலன் மூலம் கர்ப்பமாகி உள்ளாள். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.
அவளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 29 வயதிலேயே அதாவது மிகக் குறைந்த வயதில் தாத்தா ஆகும் பெருமையை அவர் பெற்றுள்ளார். படிக்கும் போதே தனது மகள் கர்ப்பம் அடைந்ததை எண்ணி அவர் வருத்தப்படவில்லை. மாறாக சந்தோஷப்படுகிறார்.
இளம் வயதிலேயே பெற்றோராக இருப்பதில் உள்ள சிரமத்தை நான் அறிவேன். அதை நினைத்து தான் சிறிது வருத்தமாக உள்ளது. எங்கள் குடும்பத்துக்கு புதிதாக வர இருக்கும் நபரை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். நான் இன்னும் இளைஞன் தான். குழந்தை பிறந்த பிறகு எங்களை போல 6 தலைமுறைகளை கொண்ட குடும்பம் இந்த உலகில் இருப்பது அரிது. இவ்வாறு ரைட் கூறினார்.
அதே நேரத்தில், குழந்தை பெறும் வரை இதே பள்ளியில் தனது காதலருடன் சேர்ந்து படிக்க விரும்புவதாக ரைட்சின் மகள் தெரிவித்து இருக்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக