பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
32 வயதான சோபனா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடத்துள்ளார். 15 வயதில் நடிக்க தொடங்கிய சோபனா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சோபனாவின் தாயார் ராணியும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். வைரம் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் வீட்டு வசதி குடியிருப்பில், தாயார் ராணியுடன் வசித்து வந்த சோபனா, திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயார் ராணி வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டி, பின்னர் கதவை திறந்து பார்க்கையில் இச்சம்பவம் நடந்திருப்பதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக ராணி கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷோபனாவின் வீட்டில் ஒரு டைரி கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த டைரி குறித்து போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக