பக்கங்கள்

18 ஜனவரி 2011

விபச்சார விடுதி நடத்தியதாக பெண் கைது!

சென்னை தியாகராயநகரில் மசாஜ் கிளப்பில் விபசாரம் செய்ததாக அந்த கிளப்பின் பெண் அதிபர் கைது செய்யப்பட்டார். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
சென்னை தியாகராயநகர் சாரங்கபாணி தெருவில் கடந்த டிசம்பர் மாதம் புதிதாக மசாஜ் கிளப் ஒன்று திறக்கப்பட்டது. அந்த கிளப்பில் மசாஜ் செய்ய செல்லும் வாலிபர்களிடம் அழகிகள் உல்லாசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
துணை கமிஷனர் சண்முகவேல் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் போலீஸ் படையுடன் சென்று அந்த கிளப்பில் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
சோதனையின்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக 3 அழகிகளை போலீசார் மீட்டனர். மசாஜ் செய்வதற்கு ரூ.2,100ம், உல்லாசம் அனுபவிப்பதற்கு தனியாக இரண்டாயிரம் ரூபாயும் போலீசார் அனுப்பிய ஒருவரிடம் கிளப் உரிமையாளர் வசூலித்துள்ளதாக தெரிகிறது.
இதன்பேரில் உரிமையாளர் சாந்தி (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூரைச் சேர்ந்த இவர், கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால், இந்த மசாஜ் கிளப்பை தொடங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக