பக்கங்கள்

09 ஜனவரி 2011

கர்ப்பமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

46 வயதாகும் அனிதா அரோரா , தபால் நிலைய மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நெய்ல், 15, மற்றும் காம்யா , 13 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
தெற்கு லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் அனிதாவிற்கு கடந்த ஜூலை மாதம் கர்ப்பமானதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. உடனடியாக பொது நல மருத்துவரை அணுகியுள்ளார் அனிதா. ஆனால் மருத்துவர்கள் இவர் கர்ப்பமாகவில்லை எனக் கூறி விட்டனர்.
அதன் பிறகும் அதிகமான எடை, வயிறு வலி, மாதவிடாய் தவறுதல் உள்ளிட்ட காரணங்களை எடுத்துக் கூறி இரண்டு மூன்று முறைகள் அனிதா மருத்துவர்களை அணுகியுள்ளார். அப்போதும் மருத்துவர்கள் கருவுருதலுக்கான பரிசோதனையை தவிர பிற பரிசோதனைகளை செய்யுமாறு கூறியுள்ளனர்.
சரியாக குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மாற்றங்களை கூறிய பின்னர் வேறு வழியின்றி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். குறை மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தை பிறந்துள்ளது. மேலும் ஒரு நாள் தாமதமாகியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக