எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்... என்ன புதுமையடா! - அடபுத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலேபோடும் ஒலியிவளோ? - வந்துகத்துங் குயிலின் இசையோ? கலைமயில்காட்டும் புதுக்கூத்தோ? - அடமுத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா?மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்மக்கள் உறவுடையாள்! - நல்லசெந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்சிரிக்கும் அழகுடையாள்! - சிறுகன்னி வயதின் நடையுடையாள்! - உயர்காதல் வடிவுடையாள்! - தமிழ்என்னு மினிய பெயருடையாள்! - இவள்என்றும் உயிருடையாள்!முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்மூப்பு வரவில்லையே! - மணச்சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையோ! - அடவிந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்விழிகள் சுழலுதடா! - கவிதந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்தன்னைத் தரவந்ததோ?தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலேசெம்மை கொலுவிருக்கும்! - ஒளிகொள்ளும் இதழில் மலர்நகை யொன்று குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்ஒளிந்து மறைந்திருக்கும்!தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று சேர்ந்த உடலுடையாள்! - கன்னிமானமெனு மெழில் ஆடையணிந்துமயக்கப் பிறந்தவளோ? - அடநானு மிவளும் இருக்கு முலகிலேநாணம் இருக்குமோடா? - நாங்கள்வான மளவு பறந்துவிட் டோமிந்தவையம் தெரியவில்லை!காலின் சிலம்பும் வளையும் இசையொலிகாட்டப் பறந்து வந்தாள்! - அந்தநூலின் இடையிலே கை கொடுத்தும் விழிநோக்கில் உயிர் கொடுத்தும் - ஒருவேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்வெள்ளை மனந் திறந்து... - புதுப்பாலின் சுவையும் வெறியுங் கலந்தொருபாடம் நடத்துகின்றாள்....
(காசி ஆனந்தன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக