கார்குழளால் என அழைத்தேன்,
தேன் துளியாய் கவி வடித்தேன்,
கொட்டியது தேள் அல்லவோ!
எட்டியது துயரல்லவோ!
நெற்றியை பிறை என்பேன்,
விழியை கயல் என்பேன்,
இதழை கொவ்வை என்பேன்,
கன்னமோ மது என்பேன்,
பற்கள் பச்சரிசி என்பேன்,
முகமோ முழு நிலவென்பேன்,
கால்களோ வாழை தண்டு என்பேன்,
இத்தனை அழகிருந்தும்
புன்னகையே இல்லையென்றால்
பெண்ணுக்கும் அழகுண்டோ!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக