கவிதைப்பெண்ணே -நீ
கவிதையாய் வடிகிறாய்,
கவிதையும் வடிக்கிறாய்,
காதல் நோய்க்கு
மருந்துண்டேன்
சுகம்தான் இல்லை
என்கின்றாய்,
காதல் புனிதமென்றும்
சொல்கின்றாய்-உனக்கு
காதல் ஏனடி
நஞ்சாய் போனது?
உள்ளம் ஏனடி
புண்ணாய் போனது?
புனிதம் ஏனடி
கசந்து போனது?
வாழ்க்கை ஏனடி
இடிந்து போனது?
காதலில் ஏனடி
சுகமின்றி போனது?
காதல் உன்னை
வெறுத்ததா?
காதலை நீ வெறுத்தாயா?
சொல்லடி கவிதைப் பெண்ணே,
இதயத்தை வதைத்து,
உடலை உருக்கி,
உயிரை பிழிந்து,
சுடர்விடும் காதல்,
உனக்கு ஏனடி
கசந்து போனது?
சொல்லடி கவிதைப்
பெண்ணே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக