காதலித்து பார்!
நிலவை பிடித்து வருவாய்,
வானவில்லை வளைப்பாய்,
மேகத்தை தூது அனுப்புவாய்,
கடலை கைக்குள் அடக்குவாய்,
காதலித்து பார்!
புல்லுடனும் பேசுவாய்,
உன்னுடனே சிரிப்பாய்,
நெருப்பு இதம் என்பாய்,
வெயில் குளிர் என்பாய்,
காதலித்து பார்!
உலகம் காலில் என்பாய்!
பூமி என் கையில் என்பாய்!
இரவே இல்லை என்பாய்!
கனவும் நிஜம் என்பாய்!
காதலித்து பார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக