பக்கங்கள்

16 ஏப்ரல் 2010

கவிதைக்கு கவியாத்த பாவைக்கு அஞ்சலி!

என் கவிகண்டு வயப்பட்டு,கவி பலதான் புனைந்து,
தேனான வார்த்தைகளை பேனாவில்தான் புகுத்தி,
கவருக்குள் அடைத்தெடுத்து தபாலில் அனுப்பி வந்த
பேதை எங்கு போனாளோ இடைவழி திரும்பி!

சோதனையில் வேதனையாம்,உலகமிது பிடிக்கலையாம்,
திருமலை சன்முகநாதாவும் வெறுத்தானாம்,
உலகமிது விளங்காமல்,இதயமது தாங்காமல்,
கழுத்திற்குள் கயிறிறுக்கி பாவை அவள் விரைந்தாளே!

உன் கவிகள் என் நெஞ்சில் அச்சாகப் பதிந்ததுவே சிறீமதி!
ஓ...வெண்ணிலா,என் கண்ணாளா,கண்ணன் வருவான்,
என்று நீ தலைப்பிட்டு எழுதிய கவிதான் எத்தனை!?
யாவும் மறந்து நீ எங்கேதான் சென்றாயோ.....?

பாசக்கயிற்றை நீ நேசமாக்கி கொண்டாயோ....?
வாசம் வீசுமுன்னே உதிர்ந்திட்ட சோகமென்ன...?
இன்னுமொரு பிறப்பெடுத்து இங்கு வந்து பிறந்துவிடு,
எங்கள் நட்புக்கு மீண்டு வந்து உயிர்கொடு....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக