பக்கங்கள்

29 டிசம்பர் 2010

கமலுடன் ஜோடி சேரும் அனுஷ்கா.

மன்மதன் அம்பு வெளியான வேகத்தில் தனது அடுத்த அம்பை எய்யத் தயாராகிவிட்டார் கமல்ஹாஸன். இந்த முறை வெளிவரும் படம் தலைவன் இருக்கின்றான், அவரது சொந்த இயக்கத்தில் உருவாகும் படம் இது!
டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அனுஷ்காவிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும், தமிழில் இதுவரை யாரும் பெறாத அளவு பெரும் சம்பளம் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழில் சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வேறு புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் உள்ளார்.
தலைவன் இருக்கின்றான் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கமல்ஹாஸன் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம். புத்தாண்டில் இந்தப் பதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்.

24 டிசம்பர் 2010

காதல் வலையில் அனுஷ்கா!

அலைபாயும் காதலுக்கு இப்போது நெடு நெடு அனுஷ்காவும் விழுந்து விட்டாராம். தான் ஒருவரை காதலித்து வருவதா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் அனுஷ்கா.
6.2 ஹைட்டில் இருக்கும் அனுஷ்கா, முன்பு தெலுங்குத் திரையுலகை ஆட்டிப்படைத்து வந்தார். இப்போது தமிழ் திரையுலகமும் அனுஷ்காவின் அசகாய அழகில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அனுஷ்காவுடன் ஜோடி சேர ஹீரோக்களுக்கு மத்தியில் 'ஆரோக்கியமான' போட்டி காணப்படுகிறது.
தெலுங்கிலும், தமிழிலும் கை நிறைய படங்கள் வைத்திரும் அனுஷ்கா, தமிழில் அவர் இரண்டு படம் மூலம் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு ஏற்றம் கிடைக்காததால் தெலுங்குக்கு டேக் ஆப் ஆனார். பின்னர் மீண்டும் வேட்டைக்காரன் மூலம் திரும்பி வந்த அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ சிங்கம் தான். தற்போது அஜீத்துடன் மங்காத்தா ஆடி வருகிறார்.
தெலுங்கில் சந்திரமுகி படத்தின் அடுத்த பாகமான நாகவள்ளி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதில் சந்திரமுகியாக நடித்திருப்பது அனுஷ்கா தான்.
படங்கள் மட்டுமன்று விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டாலே அவரை ஏதாவது ஒரு ஹீரோவுடன் சேர்த்து கிசு கிசு வந்துவிடும். இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்து வரும் அனுஷ்காவுக்கு மட்டும் வராமலா போய் விடும். வருகிறது, ஒன்றல்ல பல ஹீரோக்களுடன் கிசுகிசு வருகிறது.
ஆனால் அனுஷ்கா மனதில் ஏற்கனவே ஒருவருக்கு இடம் கொடுத்து உட்கார வைத்துள்ளாராம். ஆனால் அவர் யார் என்பதை தற்போது சொல்லுவதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த காதலன் பெயரைச் சொன்னால் நம் புருவமெல்லாம் தானாக உயரும் என்கிறார்.
தற்போது கை நிறைய படங்கள் வைத்திருப்பதால், அவற்றை எல்லாம் முடித்துவிட்டு இன்னும் 2 ஆண்டுகளில் திருமணமாம்.
அப்படி யாரப்பா அந்த அசகாய சூரன்? நீங்க சொல்லாட்டி என்ன, அடுத்த 'ரவுண்டு' கிசுகிசுவில் தெரிந்து விடப் போகிறது?

15 டிசம்பர் 2010

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்?

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? பெண்கள் சென்றால் என்ன தப்பு? இதெல்லாம் எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட ஜெயமாலாவை பாராட்டுகிறேன், என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள அய்யப்பன் சிலையைத் தொட்டு வணங்கியதாகக் கூறினார் நடிகை ஜெயமாலா. ஆனால் அவர் தொட்டிருக்க வாய்ப்பில்லை, பொய் சொல்கிறார் என மறுத்தது கோயில் நிர்வாகம். ஆனால் ஜெயமாலா, தான் கருவறைக்குள் நுழைந்து அய்யப்பனைத் தொட்டு தரிசித்தது உண்மையே என்று கூறியதால், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, நேற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்டு கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரேயா, ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு தரிசித்திருந்தால் அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன், என்று கூறியுள்ளார்.
மேலும், அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றால் என்ன தவறு? ஏன் அனுமதி மறுக்கிறார்கள் என்பதே புதிராக உள்ளது", என்று கூறியுள்ளார்.

12 டிசம்பர் 2010

கவர்ச்சி உடை தப்பில்லை!-ஸ்ரேயா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். அதற்குப் பொருத்தமான கதை, காட்சி இருந்தால். இயக்குநர்கள் தயாராக இருந்தால் சரி", என்கிறார் ஸ்ரேயா.
தமிழில் ஸ்ரேயாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஹைதராபாதில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், "ரசிகர்கள் விருப்பப்படி நடிப்பதுதான் நடிகைகள் கடமை. எனக்கு அழகு இருக்கிறது. அதன் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். உடம்பை முழுமையாக மூடிக்கொண்டு நடித்தால் ரசிகர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.
எனவே அவர்களுக்காக கவர்ச்சியாக நடிக்கிறேன். சில நடிகைகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். நானும் அது போல் நீச்சல் உடையில் நடிக்கத் தயார். ஆனால் அது போன்ற கதைகள் இன்னும் வரவில்லை.
பொது விழாக்களில் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொள்வதை சிலர் விமர்சிக்கின்றனர். அப்படி வருவதில் எந்தத் தவறும் இல்லை.
காதல் மனித வாழ்க்கையில் ஒரு அங்கம். எனக்கு யார் மீதும் இன்னும் காதல் வரவில்லை. ஆனால் சினிமா மேல் அளவு மீறிய காதல் எனக்கு இருக்கிறது. படப்பிடிப்பு என்றால் சந்தோஷமாக ஓடுகிறேன். மழை, வெயில் பற்றிக்கூட கவலைப்படாமல் நடிக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு சலிப்பே வராத விஷயம் சினிமா", என்றார்.

10 டிசம்பர் 2010

கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்! - தமன்னா.

நடிகர் கார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம் என்கிறார் நடிகை தமன்னா.
தமன்னாவிடம் தவறாமல் கேட்கும் கேள்விகளுள் ஒன்றாகிவிட்டது 'கார்த்தியுடன் காதலா?' என்பது.
இந்த முறையும் அப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்க, கடுப்பான தமன்னா இப்படிக் கூறினார்.
எனக்கும், கார்த்திக்கும் காதல் இல்லை என்று பலமுறை மறுத்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. என்னையும், கார்த்தியையும் இணைத்து பேசுவதே முட்டாள்தனம்.
அவரோடு இரண்டு படம் நடிச்சிட்டா, காதல் வந்துடுமா... உடன் நடிக்கும் ஒரு நடிகர் அவர். அவ்வளவுதான். வேற எந்த உணர்வும் இல்லை. தயவு செய்து இதை எழுதுங்கள்.
சிறுத்தை என்ற படத்தில் அவருடன் நடிக்கிறேன். அந்தப் படம் முடிந்தபிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இதுதான் எங்களுக்குள் உள்ள உறவு. போதுமா..?" என்றார்.
கார்த்தியுடன் காதல் என்ற விவகாரத்தை தொடர்ந்து மீடியாவில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதற்காக அந்தப் படம் தொடர்பான சிலரே இப்படி பொய்யான செய்திகளை வெறும் பப்ளிசிட்டிக்காக பரப்பி வருகின்றனர் என ஏற்கென நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த மாதிரி வதந்திகளைத் தவிர்க்க இப்போதெல்லாம் தவறாமல் அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தன் பாட்டியை உடன் அழைத்துச் சென்றுவிடுகிறாராம் தமன்னா!

07 டிசம்பர் 2010

விலைமாது ரோல்.. விலகிய த்ரிஷா!

தெலுங்குப் படங்களில் வாய்ப்பு என்றால், கையிலிருக்கும் தமிழ்ப் படங்களைக் கூட அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறார்கள் நடிகைகள். ஆனால் த்ரிஷாவோ, தெலுங்கில் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டிருக்கிறார்.
காரணம்...?
அது விலைமாது கேரக்டராம்!
இந்த ரோலுக்காக த்ரிஷாவுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் தரத் தயாராக இருந்தார்களாம். ஆனால் விபச்சாரியாக நடிப்பது கஷ்டம் என்பதாலும் மறுத்து விட்டாராம் த்ரிஷா.
இதுபற்றி திரிஷா கூறுகையில், "விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.
விலைமாது கேரக்டர் செய்யும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பை பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன்.
கமலுடன் நடித்த மன்மதன் அம்பு படம் வருகிற 17-ந்தேதி ரிலீசாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் ரொம்ப பயந்தேன். படப்பிடிப்புக்கு போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது. அந்த படத்தை ரொம்பவும் எதிர்நோக்கி இருக்கிறேன்.
நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது.
ஆனால் சில நடிகைகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களை தாங்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். அதுதான் தவறு. நான் அப்படியல்ல.." என்றார்.

04 டிசம்பர் 2010

சேட்டன் திருந்துவதுபோல் தெரியவில்லை!

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள். அதில் ஆர்யா மட்டும் வாயில் சூயிங்கத்தை போட்டு மென்ற படி ஆஃப் டிரவுசருடன் அநாகரீகமாக மேடை ஏறியது மேடையில் இருந்த வி.ஐ.பி.களுக்கு மட்டுமல்ல அந்த திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. பால்கனியில் இருந்த ஒரு ரசிகர் ஏன் ஆர்யா உங்களுக்கு முழு பேண்ட் கிடைக்கலியா? என்று கேட்டே விட்டார்.அதற்கு மேடையில் பேசும் போது பதில் அளித்த ஆர்யா துபாய்நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்றுவிட்டு நான், ஜீவா, ஜெயம்ரவி எல்லோரும் விமானத்தில் இருந்து அப்படியே வந்து விட்டோம அது தான் ஆஃப்டிரவுசர் என்று சமாளித்தார். அதே விமானத்தில் வந்த ஜெயம்ரவி ஜீவா உள்ளிட்டவர்கள் எல்லாம் மேடை ஏறப் போகிறோம் என்று பேண்ட் - சட்டையுடன் உஷாராக வந்து விழாவில் கலந்து கொள்ள ஆர்யாவுக்கு அந்தபயம் இல்லாததும் எடுத்துப்போடும் ஃபேண்ட்டில் ஒன்றை பேக்கில் இருந்து எடுத்து மாட்டிக் கொண்டு வர மனமில்லாததும் ஏன்? என்பது புரியாத புதிர்தான்! சமீபத்தில் ஆர்யா வெளிநாட்டில் நடந்த மலையாள பட தமிழ் பட உலகையும் தமிழ் நடிகர்களையும் அநாகரீகமாக பேசி அவமானப்பட்டு வரும் சுவடு மறைவதற்குள்ளாகவே வி.ஐ.பிகள் தமிழ் சினிமா மேடையையும் இவ்வாறு அவமானப்படுத்தி இருப்பது வேதனைக்குரிய விஷயம் தான்! சேட்டன் திருந்துவது போல் தெரியலை‌‌யே?!

29 நவம்பர் 2010

ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை.

தமிழரையும் தமிழர் ரசனையயும் கீழ்த்தரமாகப் பேசிய நடிகர் ஆர்யாவின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்து மக்கள் கட்சி.
வெளிநாட்டு பட விழாவொன்றில் ஆர்யா பங்கேற்றுப் பேசும்போது, நான் ஒரு மலையாளி. தமிழ் படங்களில் நடிக்க தெரியாதவர்களும் நடிக்கலாம். அவர்கள் அந்த அளவுதான் ரசிப்பார்கள். பணம் கொட்டும். ஆனால் மலையாள படங்களில் நடிக்க தெரிந்தவர்களால் மட்டுமே நடிக்க முடியும். இங்குதான் தரமான படங்கள் வருகின்றன, என்று கூறியிருந்தார்.
இதனை ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் வி சி குகநாதன் கண்டித்துப்பேசினார்.
அவரைத் தொடர்ந்து, இவ்விஷயத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள இந்து மக்கள் கட்சி.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்யா உருவப் படத்தக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் பல்லடத்தில் நடந்த போராட்டம் தமிழக மெங்கும் தொடரும். அவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள சிக்குபுக்கு படத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம். தமிழ் சினிமாவில் சம்பாதித்து விட்டு தமிழ் நடிகர்களை கேவலமாக பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. ஆர்யா தாராளமாக தரமான படங்கள் எடுக்கும் மலையாள பட உலகுக்கு போகலாம்..." என்றார்.
சிக்குபுக்கு படம் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 நவம்பர் 2010

சம்பள பாக்கி.. நடிகை சங்கீதா புகார்!

தம்பிக்கோட்டை படத்தில் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தராமல் ஏமாற்றுவதாக நடிகை சங்கீதா புகார் கூறியுள்ளார்.
நரேன், பூனம் பாஜ்வா, பிரபு, மீனா என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் படம் தம்பிக்கோட்டை.
இப்படத்தில் வில்லியாக சங்கீதா நடிக்கிறார். இந்த படத்தில் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக சங்கீதா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
தனது புகாரில், "தம்பிக்கோட்டை படம் முடிந்துவிட்டது. இதில் எனக்கு ரூ.3.5 லட்சம் சம்பள பாக்கி உள்ளது. ஒப்பந்தப்படி கடந்த பிப்ரவரி மாதமே இந்த பணத்தை தந்திருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றி விட்டனர். இறுதிநாள் படப் பிடிப்பில் சம்பள பாக்கிக்காக செக் கொடுத்தார்கள். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அதன் பிறகு பலமுறை பணம் கேட்டு தொடர்பு கொள்ள முயன்றேன். பொருட்படுத்தவே இல்லை.
எனவே எனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தொகையை நடிகர் சங்கம் தலையிட்டு வாங்கி கொடுக்க வேண்டுகிறேன்..." என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த புகாரைப் பரிசீலித்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

26 நவம்பர் 2010

நந்தலாலா சொந்தக் கதையா?

நந்தலாலா படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல்தானே இது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே அதற்கு பதில் சொல்லாத மிஷ்கின், கோபமாக 'இந்தப் படம் ஒரிஜினல்... இதை காப்பி என்று நிரூபிக்க முடியாது' என்றெல்லாம் ஆவேசப்பட்டார். இடையில் நீண்ட நாட்கள் படம் வெளியாகாமல் இருந்தது.
இப்போது படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி போடப்பட்டது. படம் முடிந்த பிறகு வந்த மிஷ்கின், இது தன்னுடைய சொந்தக் கதை என்றும், தனது மூத்த சகோதரர் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பில் எடுத்ததாகவும் கூறினார்.
படம் குறித்த விமர்சனத்தை பிறகு பார்க்கலாம். ஆனால் இந்தப் படம் குறித்த சில உண்மைகளைப் பார்க்கலாம்.
நந்தலாலாவில் வரும் சில பாத்திரங்கள் தவிர, கதை, எடுக்கப்பட்ட விதம், காட்சி அமைப்பு முழுக்க முழுக்க ஜப்பானிய படமான கிகுஜிரோவின் தழுவல் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நந்தலாலா கதைக்குப் போகும் முன், கிகுஜிரோவின் கதை என்னவென்பதைப் பார்த்துவிடுவோம்:
தகேஷி கிடானோ என்பவர் 1999-ம் ஆண்டு எடுத்த படம்தான் கிகுஜிரோ (Kikujiro). சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட படம். பட விழாக்களில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது.
ஒரு கோடை விடுமுறையில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிப் புறப்படுகிறான். ஒரு புகைப்படமும் முகவரியும் மட்டுமே தாயின் ஆதாரமாகக் கிடைக்கிறது அவனுக்கு. அவனது பயணத்தில் உடன் சேர்ந்து கொள்கிறான் கிகுஜிரோ என்ற திருடன், ஆனால் சிறுவனுக்கு உதவும் நல்ல மனசுக்காரன்.
அவர்களது நெடுஞ்சாலைப் பயணம் தொடர்கிறது... வழியில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முதலில் முரண்பட்டு பின்னர் உதவுகிறார்கள். சுமோ சண்டைக்காரர்கள் மாதிரி குண்டாக இருவர் எதிர்ப்படுகிறார்கள். கிகுஜிரோவுக்கும் சிறுவனுக்கும் உதவுகிறார்கள்.
குறிப்பிட்ட ஊருக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்கொரு பக்கம் தாயின் வீட்டைத் தேடுகிறார்கள். கடைசியில் கிகுஜிரோ அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவளோ புதிய கணவன், புதிய பெண் குழந்தை என செட்டிலாகிவிட்டிருக்கிறாள். கிகுஜிரோ வந்த விஷயத்தைச் சொன்னதும், தன் மகனைக் கூட்டி வந்து வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே என்று கெஞ்சுகிறாள்.
அங்கிருந்து கிளம்பும் கிகுஜிரோ, அந்த ஊரில் சிறுவன் தேடும் அம்மா இல்லை என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்புகிறான். அப்போது கிகுஜிரோவுக்கு ஒரு ஹோமில் விடப்பட்டுள்ள தனது அம்மா நினைவுக்கு வருகிறாள்.
கடைசியில் தான் தேடும் அம்மா வரமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்கிறான் சிறுவன். அவனும் கி்குஜிரோவும் அவரவர் வழியில் பிரிகிறார்கள்...
-இப்போது மிஷ்கின் 'சுட்டுள்ள' நந்தலாலாவைப் பாருங்கள்!

24 நவம்பர் 2010

விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, செயல்கள்!- வனிதா அதிரடி!

தந்தை விஜயகுமார் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக மகள் வனிதா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜயகுமார் குடும்ப விவகாரம், பல வில்லங்கங்களை வெளிக் கொணர ஆரம்பித்துள்ளது.
விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண்குமார் ஆகியோர் தன்னை கடுமையாகத் தாக்கியதாக போலீசில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மூவரையும் கைது செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை 11.30 மணிக்கு குழந்தைகள் ஜோவிகா (வயது 7), ஜெய்னிதா (2 1/2 வயது) ஆகியோரை அழைத்துக்கொண்டு வனிதா சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு டி.ஜி.பி. லத்திகா சரணை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் டி.ஜி.பி. அலுவலகம் வெளியே ரோட்டில் நின்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "தீபாவளி பண்டிகை அன்று மகன் விஜய ஸ்ரீஹரியை என் தந்தை விஜயகுமார் வீட்டுக்கு அழைத்து போனேன். பிறகு அவனை திரும்ப அழைத்து சென்றபோது விஜயகுமாரும், அருண் விஜய்யும் தடுத்தனர். மகனை என்னோடு அனுப்ப மறுத்தார்கள். எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அருண்விஜய் காலால் என்னை எட்டி உதைத்தார். கொலை மிரட்டலும் விடுத்தார்.
இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்தேன். அருண்விஜய் மீது வன் கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினேன். 7ம் தேதி அன்று இந்த புகாரை அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
என் தந்தை விஜயகுமார் 15ம் தேதி என்னுடைய கணவர் ஆனந்தராஜ், அவரது கையை முறுக்கி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீது ஆனந்தராஜை கைது செய்து விட்டனர். விஜயகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி என் கணவரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். மகன் அருண் விஜய்யை காப்பாற்ற மகள் என்றும் பாராமல் என் மேல் புகார் அளித்துள்ளார்.
எனது முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விஜய ஸ்ரீஹரியை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மூன்றரை வருடம் போராடி மீட்டு வந்தேன். அப்போது எனது தந்தை எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எதிர்காலத்தில் எனது மகனால் சொத்துக்கு பிரச்சினை வரும் என்று கருதி அவனை தன்னோடு வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
இவர்களின் சொத்தும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். இவர்கள் உறவே எனக்கு வேண்டாம்.
நாறிப் போய்விடும்....
என் தந்தை விஜயகுமார் பற்றி நிறைய ரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்.
ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திணறினார்கள். என் கணவர்தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
விஜய்குமார் வீட்டில் எவ்வளவோ அசிங்கங்கள் நடக்கின்றன. சட்டவிரோதமான பல காரியங்கள் நடக்கின்றன. இவற்றை வெளியில் சொல்லத்தான் போகிறேன். அப்போது இவர்கள் கதை நாறப் போகிறது.
அருண் விஜய் ஸ்டண்ட் பயிற்சி எடுத்துள்ளார். அவர் போயும் போயும் ஒரு பெண்ணிடத்தில் தைரியத்தை காட்டுகிறார். விஜயகுமார் மீடியா என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்துள்ளேன். அது அருண் விஜய்க்கு பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் என்னை அடிக்கிறார்.
இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு முக்கிய காரணம் என் தங்கை ப்ரீதாவும், அவள் கணவர் இயக்குநர் ஹரியும்.
மதுரவாயல் போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவேதான் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளேன். டி.ஜி.பியும் ஒரு பெண் என்பதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று கருதுகிறேன்.
விஜயகுமார் குடும்பத்தினர் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றனர். அது நடக்காது. தற்கொலை செய்ய நான் கோழையல்ல. துணிச்சலாக நின்று ஜெயித்து காட்டுவேன்..." என்றார் வனிதா.

21 நவம்பர் 2010

புத்தாண்டு ஹோட்டல் குத்தாட்டம்-நடிகைகளுக்கு வலைவீச்சு!

புத்தாண்டு வேகமாக நெருங்கி வருவதால், டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் பார்ட்டிகளில் ஆடுவதற்கு நடிகைகளை புக் செய்யும் பணியில் நட்சத்திர் ஹோட்டல்கள் படு தீவிரமாக இறங்கியுள்ளன.
ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டை இப்போதெல்லாம் பார்ட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கொண்டாடுவது பேஷனாகி விட்டது. அதிலும் நட்சத்திர ஹோட்டல்களில் டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் களை கட்டும்.
இதுபோக தீம் பார்க்குகளிலும் இப்போது புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள நடிகைகளை புக் செய்து ஆட வைப்பது வழக்கமாகி வருகிறது. மும்பையில் இதுபோன்ற ஆட்டங்களுக்காக கவர்ச்சி நடிகைகளை புக் செய்வது வழக்கம்.
இந்தப் பழக்கம் இப்போது சென்னைக்கும் பரவியுள்ளது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் சில ஆந்திரத்து அனுஷ்காவை புக் செய்ய கடுமையாக முட்டி மோதி வருகின்றனவாம். அதேபோல மல்லிகா ஷெராவத்தை வரவழைக்க ஒரு குரூப் கிளம்பியுள்ளதாம்.
இதேபோல சின்னத் திரை நடிகைகளுக்கும் கூட டிமான்ட் ஜாஸ்தியாகியுள்ளதாம். நல்ல சம்பளம் தரப்படுவதால் இதில் பங்கேற்க நடிகைகளுக்கும் இடையே கூட கடும் போட்டியாம்.

18 நவம்பர் 2010

ரகசிய இடத்தில் நயன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

முன்னெப்போதும் இல்லாத சிக்கலுக்கு நடுவே இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரபுதேவாவின் 'கள்ளக் காதலி'யான நயன்தாரா.
ஒரு பக்கம் பிரபுதேவாவை திருமணம் செய்வதா... 'கோயிங் ஸ்டெடியாக' தொடர்வதா என்ற குழப்பம்... இன்னொரு பக்கம் ரம்லத் வழக்கில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஆஜராவதா இல்லையா என்ற தயக்கம்... புதுப்படங்களை ஒப்புக் கொள்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் என நயன்தாராவுக்கு இது உண்மையிலேயே மறக்க முடியாத பிறந்தநாள்தான்.
இந்த விசேஷ நாளில் அனைவருடனும் இணைந்து கொண்டாட முடியாத சூழலில் உள்ளாராம் அவர். இதனால் தன் காதலன் பிரபு தேவாவுடன் ரகசிய இடத்தில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத இடத்தில் இருவரும் தங்கியுள்ளனராம்.
நயன்தாரா கைவசம் எலக்ட்ரா என்ற மலையாளப் படமும், ஒரு தெலுங்குப் படமும் மட்டுமே உள்ளன.
புதுப்படங்களில் அவர் நடிக்க மாட்டார் என பிரபுதேவா அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

15 நவம்பர் 2010

'தம்' அடிக்கும் ஐஸ்வர்யா ராய்!

ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ள குஸாரிஷ் படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போல நடித்திருக்கும் காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரோஷனும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ள இப்படம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரோஷனுடன் சேர்ந்து ஐஸ்வர்யா புகை பிடிப்பது போல காட்சி வருகிறது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குஸாரிஷ் படத்தில் வரும் காட்சிகள் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண் களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது.
நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன்.
உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன் என்றார் ஐஸ்வர்யா.

11 நவம்பர் 2010

விவேக்கின் பேச்சு உத்தம புத்திரனுக்கு ஆப்பு!

நடிகர் தனுஷ், ஜெனிலியா இணைந்து நடித்து வெளியாகியுள்ள உத்தமபுத்திரன் படத்தில் சிரிப்பு நடிகர் விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து பேசிய வசனத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கோவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளனராம்.
தீபாவளிக்கு வெளியான படங்களில் ஒன்று உத்தமபுத்திரன். இப்படத்தில் கவுண்டர் சமூகத்தினர் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக நடிகர் விவேக் பேசியுள்ள வசனங்கள் தங்களது சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கவுண்டர் சமுதாயத்தினர் கொதிப்படைந்துள்ளனர்.
இதையடுத்து கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் உ.தனியரசு தலைமையில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்சியின் கோவை மாநகர அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்தை புதன்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து படத்தை நிறுத்தி வைக்குமாறு திரையரங்கங்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து படம் திரையிடப்பட்டிருந்த 6 தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பிட்ட வசனங்கள் உள்ள காட்சிகளை நீக்கிவிட்டு அத் திரைப்படத்தை திரையிடுவதாக, திரையரங்க உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் மாநகர அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் கூறுகையில்,
எந்தவொரு சமூகத்தைப் பற்றி இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவது கண்டனத்துக்குரியது. இன்றைய சூழலில் திரைப்படங்கள் மக்களைச் சென்றடையக் கூடிய மிக முக்கியமான ஊடகமாக இருக்கிறது. இச்சூழலில், உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் விவேக் பேசும் வசனங்கள், கவுண்டர் சமூகத்தினருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எங்களது மனவேதனையை மாவட்ட ஆட்சியரிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் தெரியப்படுத்தினோம். ஆட்சியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புதன்கிழமை காட்சிகள் நிறுத்தப்பட்டன.
நாங்கள் வலியுறுத்தியுள்ள வசனங்கள் அடங்கிய காட்சிகளை தவிர்த்து, திரையிடுவதாக திரையரங்க உரிமையாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
விவேக் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே தனது படங்களில் ஆபாச வசனங்களை அதிகம் பேசுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் ஒரு சமூகத்தினரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் விவேக்.

08 நவம்பர் 2010

அஜீத்துக்கு 'அட்வைஸ்' கொடுத்த திரிஷா!

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு 'வாசனை'யான ஒரு ஐடியாவைக் கொடுத்துள்ளாராம் திரிஷா.
அஜீத்துடன் இணைந்து 'மங்காத்தா' ஆடிக் கொண்டிருக்கிறார் திரிஷா. 'மன்மதன் அம்பை' முடித்த கையோடு 'மங்காத்தா'வுக்கு வந்துள்ளதால் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார் திரிஷா. படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்துள்ளதாம். அடுத்த ஷெட்யூலுக்குத் தயாராகி வருகிறது யூனிட்.
இந்த இடைப்பட்ட கேப்பில் ட்விட்டர் மூலம் ஒரு சூப்பர் செய்தியை கொடுத்துள்ளார் திரிஷா.
அதில் திரிஷா கூறியிருப்பதாவது...
அஜீத் ஷூட்டிங்கின்போது தானே தனது கையால் தயாரித்த பிரியாணியைக் கொடுத்து அனைவரையும் அசத்தி விட்டார். உண்மையிலேயே அஜீத் மிகப் பெரிய சமையல்நிபுணர். அட்டகாசமான பிரியாணி அது. பேசாமல் உடனே ஒரு ரெஸ்டாரென்ட்டை தொடங்கி விடுங்கள் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
அதேபோல நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் கண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கும், மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் திரிஷா.
அதில், கமல்ஹாசனுக்கு எனது மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துகள். எனக்குப் பிடித்தமான சூப்பர் ஸ்டார் அவர்தான். அவருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. எனது இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடன் பணியாற்றுவது செம ஜாலியாக உள்ளது என்று கூறியுள்ளார் திரிஷா.

05 நவம்பர் 2010

ஒரே படத்தில் ரெண்டு 'கா'

ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் இப்போது நிறைய வர ஆரம்பித்து விட்டது. அந்த வரிசையில் யார் என்ற புதிய படம் 2 நாயகிகளுடன் வரவுள்ளது.
யார் என்று பல ஆண்டுகளுக்கு ஒரு தமிழ்ப் படம் வந்தது. இப்போது அதே பெயரில் புதிய படம் உருவாகிறது. முதலில் இதற்கு அஞ்சுகம் என்றுதான் வைத்திருந்தார்கள். பின்னர் என்ன யோசித்தார்களோ, அதை மாற்றி விட்டு யார் என்றுசூட்டி விட்டனர்.
இதில் முக்கிய நாயகியாக சினேகாவும், இன்னொரு நாயகியாக பூமிகாவும் நடிக்கின்றனர். இருவருக்கும் முக்கியமான பாத்திரங்களாம். இதனால் இமேஜ் பிரச்சினை வராது என்கிறார் இயக்குநர் ஜெயராம்.
அதற்கேற்றார் போல இரு நடிகைகளும் கா விடாமல் சமர்த்தாக நடித்துக் கொடுத்தார்களாம். அதுபோக நன்றாக பழகி தோழிகளாகி விட்டனராம்.
படத்தின் தயாரிப்பாளர் சதீஷ். இவர் வேறு யாருமல்ல, நடிகை ஷ்ரியாவின் மேனேஜர். இப்போது படத் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
அடுத்து ஷ்ரியாவை வைத்து படம் எடுப்பாரா சதீஷ்.

03 நவம்பர் 2010

எதிர்மனுதாரராக நடிகை நயன்தாரா.

நயன்தாரா - பிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும், இருவரும் ஒன்றாக சுற்றக் கூடாது என்று கோரியும் பிரபு தேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் சம்மனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை என கூறப்பட்டது.
இதனால் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ரம்லத் வக்கீல் ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2-வது சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபுதேவாவும், நயன் தாராவும் சமீபத்தில் ரகசியமாக சென்னை வந்தனர். பிரபு தேவாவின் தந்தை சுந்தரத்தின் ஆழ்வார்பேட்டை வீட்டிலேயே இருவரும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு சம்மன் அனுப்ப வைக்கப்பட்டது. ஆனால் பிரபுதேவா அங்கு இல்லை என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
நயன்தாரா எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரது 2 வது சம்மனும் நடிகர் சங்கத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சம்மனை பெற்றுக் கொண்டனர். வழக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் நேரில் ஆஜராவார்கள் என பிரபுதேவாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 நவம்பர் 2010

திருமணம்-தபுவின் குழப்பம்!

காதல் தேசம் படத்துக்காக தாஜ் கோரமண்டலில் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் கேடி குஞ்சுமோன் (அப்போதுதான் அவருக்கு போதாத காலம் துவங்கியிருந்தது!).
பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் இப்படிக் கேட்டார்:
"ஆமா... படத்தில் கல்லூரி மாணவியாக வரும் அந்தப் பொம்பள யார்?" என்று வெள்ளந்தியாகக் கேட்டுவைக்க, நெஞ்சைப் பிடித்துக் கொள்ளாத குறையாக தவித்துப் போனார் குஞ்சுமோன்!
"அவங்க சின்னப் பொண்ணுதாங்க... பேர் தபு. இந்தில பேமஸ் ஆர்டிஸ்ட்..." என்று நீண்ட விளக்கமெல்லாம் தந்தார். ஆனால் தமிழில் தபு எடுபடவே இல்லை. இருந்தாலும் இந்தி, தெலுங்கில் தபுவுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு!
குறிப்பாக நாகார்ஜுனா ரசிகர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும்!
ஆனால் அம்மணியின் பழக்கம் நாகார்ஜூனாவோடு நிற்கவில்லை... பாலிவுட்டில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
கடைசியாக மாடலிங்கில் பிஸியாக இருக்கும் உபேன் பட்டேல் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாககக் கூட செய்திகள் வந்தன. ஆனால் இதை (இது ஒன்றை மட்டும்தான்!) தபு மறுத்தார்.
இப்போது தபுவுக்கு வயது கிட்டத்தட்ட 40!
இந்தநிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த அந்த தொழில் அதிபருடன் தபு நெருங்கிப் பழகுவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு இணைந்தே செல்வதாகவும் இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதோடு, தொழில் அதிபர் குடும்பத்தினர் தபு குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதுபற்றி தபு கூறுகையில், "இந்த ஒரு வருடத்தில் எனக்குத் திருமணம் என 5 முறை செய்திகள் வெளியாகியுள்ளன. நான் திருமணம் செய்து கொள்வேனா என்று தெரியவில்லை. அப்படியொரு உறவுக்காக நான் யாருடனும் பழகவில்லை..," என்கிறார் மையமாக!

01 நவம்பர் 2010

'பாய்ஸை' வெறுக்கும் சித்தார்த்!

பாய்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் சித்தார்த், தற்போது அந்தப் படத்தை தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படம் பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்த படமாகும். ஆனால் இப்படத்தில் நடித்த சித்தார்த், பரத், ஜெனிலியா, நகுல் ஆகியோர் இப்போது சினிமாவில் பிசியாக உள்ளனர்.
அதில் சித்தார்த் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் ஹீரோ. பரத் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், ஜெனிலியா நான்கு மொழிகள் பிசியாக உள்ள நடிகை . நகுலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படத்தில் நடித்த நான்காவது நபரான தமன் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் பாய்ஸ் படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார் சித்தார்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாய்ஸ் படத்துக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம், அந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாய்ஸ் படத்தை மறக்கவே விரும்புகிறேன்.
யாராவது என்னிடம் உனது முதல் படம் என்ன என்று கேட்டால் நுவ்வொஸ்தான்டன்டே நேநொட்டாதன்டனா (தெலுஙகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம்) படத்தைத்தான் கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.
நேரம்தான்!

31 அக்டோபர் 2010

வில்லன் தொல்லை தருகிறார்-நாயகி பாக்யாஞ்சலி!

உன்னைக் காதலிக்கிறேன் படத்தில் வில்லனாக நடித்த வேலு என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூறி தொடர்ந்து தொல்லை தருவதாக அப்படத்தின் நாயகி பாக்யாஞ்சலி புகார் கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் பாக்யாஞ்சலி. இவரது ஒரிஜினல் பெயர் அஞ்சலியாம். இவர் நெல்லு படத்தின் மூலம் நடித்து அறிமுகமானவர். தற்போது உன்னைக் காதலிக்கிறேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்தவர் வேலு.
இந்த வேலு தற்போது தனக்கு பல்வேறு வகையில் தொல்லை தந்து வருவதாக பாக்யாஞ்சலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார் பாக்யாஞ்சலி. இதுகுறித்து விசாரிக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் வந்தார் பாக்யாஞ்சலி அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் வேலுவின் வீடு உள்ள புரசைவாக்கத்திற்குப் போலீஸார் பாக்யாஞ்சலியுடன் சென்றனர். ஆனால் வேலு அங்கு இல்லை.
இதையடுத்து வேலுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர் போலீஸார்.
கடந்த ஆண்டு சினிமாப் படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தபோதுதான் பாக்யாஞ்சலியை சந்தித்துள்ளார் வேலு. அப்போதே கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அதை பாக்யாஞ்சலி மறுத்து விட்டார். இனிமேல் இப்படிப் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் வேலு விடாமல் தொடர்ந்து பாக்யாஞ்சலியை அனத்தி வந்துள்ளார். பாக்யாஞ்சலி ஷூட்டிங்குக்காக போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து போயுள்ளார். எஸ்.எஸ்.எம். அனுப்புவது என்று இறங்கியுள்ளார். தொல்லை தொடர்ந்ததால், போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பாக்யாஞ்சலி.
இதுகுறித்து பாக்யாஞ்சலி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் வேலுவிடம் நட்புடன் பழகினேன். ஆனால் அவர் தன்னுடன்தான் பேச வேண்டும், பழக வேண்டும், செல்போனில் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
எங்கு போனாலும் தொல்லை தருகிறார். எனது கைப் பையை பறித்துக் கொண்டு அதிலிருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டார்.
வேலு வீட்டில் இல்லை என்றும் எனவே அந்த பையை எடுத்துத் தருவதாகவும் அவரது வீட்டுக்கு வேலுவின் உறவுப் பெண் ஒருவர் அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு மறைந்திருந்த வேலு என்னை அடித்து அறை ஒன்றில் அடைத்து வைத்தார். மேலும், என்னிடம் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
அவரை திருமணம் செய்ய வேண்டுமென்றும், படங்களில் அவருடன் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றும், ரூ.15 லட்சம் அவரிடம் நான் கடன் வாங்கியது போலவும் ஆவணங்களை தயார் செய்துள்ளார். மேலும் அவருக்கு நான் முத்தம் கொடுத்தது போன்ற வீடியோ படமும் எடுத்து வைத்துள்ளார்.
அதை பத்திரிகையில் கொடுத்து என்னை கேவலப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாக்யாஞ்சலி.

30 அக்டோபர் 2010

மதுஷாலினி நடிக்கும் அவன் இவன்.

பாலாவின் அவன் இவன் படத்தில் இன்னொரு நாயகியாக மது ஷாலினி நடிக்கிறார்.
அவன் இவன் படத்தை 6 மாதங்களுக்குள் முடித்துவிடுவதாக பாலா கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்திருந்தாலும், வழக்கம் போல தாமதம் தவிர்க்க முடியாமல் தொடர்கிறது.
தேனியில் படமாகி வரும் அவன் இவனில் ஆர்யா, விஷால் நடிப்பதும், நாயகியாக ஜனனி நடிப்பதும் தெரிந்த சங்கதி.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயினாக மது ஷாலினி நடிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகி வருகிறது அவன் இவன். தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மது ஷாலினி. ஓரிரு தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இரு பாடல்களை இளையராஜா பாடியுள்ளார்.

29 அக்டோபர் 2010

ரசியுங்கள்,பாலாபிஷேகம் வேண்டாம்.

ரசிகர்கள் திரைப்படங்களை ரசித்து மகிழலாம், ஆனால் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம், என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறினார்.
திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "இன்று தமிழ்நாட்டில் தமிழ் பற்று கொண்டு ஆவேசமாக பேசினால் துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தேர்தலை முன் வைத்து தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குகிறார்கள். இதனால் அண்ணன்- தம்பி உறவுகூட பிரிக்கப்படுகிறது.
போராட்ட உணர்வை இழந்ததால் கச்சத்தீவை இழந்தோம். சேது சமுத்திர திட்டத்தை ஒருமித்த குரலாக நம்மால் நிறைவேற்ற முடிய வில்லை. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை போல் தமிழக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
சினிமா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல. ரசிகர்கள் சினிமாவை ரசிக்கட்டும். ஆனால் பாலாபிஷேகமெல்லாம் வேண்டாம்.
காவிரிப் பிரச்சினை தீர, கருணாநிதி , ஜெயலலிதா, விஜய்காந்த் போன்ற தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி, பிரதமரைச் சந்தித்து பிரச்சினையை வலியுறுத்த வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளின் பிரச்சினைக்கு சரியான தீர்வு", என்றார்.
அப்போது, ஒரு நிருபர், நதிநீர் இணைப்புக்கு ரூ 1 கோடி தருவதாக ரஜினிகாந்த் கூறினாரே, அது என்ன ஆயிற்று? என்றார்.
உடனே தங்கர் பச்சான், "எதுவும் நடக்கப் போவதில்லை என்பதால் அவர் அமைதியாகிவிட்டாரோ என்னவோ..", என்றார்.

27 அக்டோபர் 2010

நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்!

நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.
அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சி க்கு விமானத்தில் சென்றனர்.
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.
அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.
நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.
இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு 'செல்போன்' மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை 'மீட்க' திருச்சிக்கு விரைந்தார்கள்.
நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
பிதா மகன் ஸ்டைலில்...
பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.
நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

25 அக்டோபர் 2010

உதயநிதியுடன் நடிக்க நயன்தாரா மறுப்பு?

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் நயனதாரா என்கிறார்கள்.
ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் உதயநிதி.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ராஜேஷ்தான், உதயநிதியை ஹீரோவாக்குகிறார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் உதயநிதி.
தற்போது உதயநிதிக்கு ஜோடி தேடிக் கொண்டிருக்கிறார்கள். நயனதாராவைக் கேட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் அவர் சரி என்று சொல்ல மறுத்து விட்டாராம். மேலும், இப்படத்தில் நடிக்கும் ஆர்வத்திலும் அவர் இல்லையாம். அவர் தற்போது வேறு மாதிரியான சூழலில் சிக்கியிருப்பதால் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.
இருந்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறாராம் ராஜேஷ். அதேசமயம், வேறு நாயகிகள் குறித்தும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.
இப்படத்திற்கு நண்பேன்டா என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தை தலைப்பாக்கலாம் என்று தெரிகிறது.

23 அக்டோபர் 2010

4 படங்களில் நாயகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டேன் – ஐஸ்வர்யாராய்.

இருவர்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யாராய்.
ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன்” நான்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி விட்டதாக ஐஸ்வர்யாராய் கூறினார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ் படங்களில் நடிக்க எனக்கு மொழி பிரச்சி னையாக இல்லை. இருவர், ஜீன்ஸ் படங்களில் நடித்த போது கொஞ்சம் சிரமம் இருந்தது. இப்போது இல்லை. தமிழ் படத்தில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறது. வசனங்களை புரிந்து கொண்டு தான் பேசுவேன்.
இருவர்” படத்தில் நடித்த போது புதுமுகமாகத் தான் இருந்தேன். இப்போது நிறைய அனுபவங்கள் கிடைத்து உள்ளது. நிறைய மொழி பேசும் மக்களை சந்தித்து விட்டேன். எல்லா மொழிகளுக்கும் மரியாதை கொடுக்கிறேன்.
ரஜினி எனக்கு ஆச்சரிய மாக தெரிகிறார். அவர் சூப்பர் ஸ்டார் ஆனாலும், அடக்கமாக இருக்கிறார். எளிமையாக தெரிகிறார். எல்லோரிடத்திலும் அன் பாக பழகுகிறார். அவருடன் “எந்திரன்” படத்தில் நடித் தது சந்தோஷ மாக இருக்கிறது.
எந்திரன் படத்தில் நடிப்பதற்கு நான் கஷ் டப்பட வில்லை. ஈஸியாக நடித்து இருந்தேன். ஆனால் இப்படம் எனது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனை படமாகும்.

21 அக்டோபர் 2010

நீதுவிற்கு கிடைக்குமா தமன்னா இடம்?

தீராத விளையாட்டு பிள்ளை நீது சந்திரா கைவசம் ஆதிபகவன் எனும் அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் மட்டுமே இருக்கிறது. தேடி வந்த அஜீத்தின் மங்காத்தா வாய்ப்பு கைநழுவி போய் விட்டாலும், அம்மணிக்கு தமிழ் சினிமாவில் தமன்னா இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.

அதனால் தனியாக தமிழ் ஆசிரியர் வைத்துமும்பையில் உள்ள தன் வீட்டில் தமிழ் கற்று வருகிறாராம் நீது. அமீரின் அதிபகவன் அந்த இடத்தை தமிழில் தனக்கு பெற்றுத் தரும்போது, தானே தமிழில் டப்பிங் பேச வேண்டும் என்பதும் அம்மணியின் ஆசையாம்.
நீதுவின் ஆசை பேராசை என்றாலும் தமிழ் மொழியை விரும்பி கற்கும் நடிகை என்பதால் நிறைவேற வாழ்த்துவோம்!.

20 அக்டோபர் 2010

அரைகுறை ஆடை… நசுக்கிய ரசிகர்கள்… கோபத்தில் ஸ்ரேயா!!

பொது இடங்களில் மிகமிகக் குறைச்சலான உடையில்தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போலிருக்கிறது.
ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் தம்மாத்துண்டு உடையோடு மேடையேறி, ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா.
ஆனாலும் அம்மணி தனது உடை விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக கஞ்சத்தனம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது.
விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவுதான்… நெருக்கித் தள்ளியபடி ஸ்ரேயாவை சூழ்ந்தனர் ரசிகர்கள்.
விழா ஏற்பாட்டாளர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
கூட்டத்தில் சிக்கிய ஸ்ரேயாவை சிலர் இழுக்கவும் கிள்ளவும் முயன்றனர். அவர்கள் பிடியில் தவித்தார் ஸ்ரேயா. ஒரு வழியாக விழா அமைப்பாளர்கள் ரசிகர்களை தள்ளி விட்டு ஸ்ரேயாவை மீட்டனர்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத ஸ்ரேயா, திட்டிக் கொண்டே விழாவிலிருந்து பாதியில் வெளியேறினார்.

19 அக்டோபர் 2010

19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (54). முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர் கென்யாவில் தங்கியுள்ளார். இவர் அதிபர் ஒபாமா தந்தையின் முதல் மனைவியின் மகன் ஆவார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது 3-வது மனைவியாக 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பள்ளி மாணவியான இவர் திருமணத்துக்கு பின் தன் படிப்பை நிறுத்தி விட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மாலிக் ஒபாமாவை இவர் திருமணம் செய்ய முயன்றார். அதற்கு அவரின் தாயார் மேரி அகோ ஒயூமோ அனுமதி அளிக்கவில்லை. தற்போது அனுமதி கொடுத்ததின் பேரில் அவரை திருமணம் செய்துள்ளார்.
கென்யாவில் ஒருவர் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போது மாலிக் ஒபாமா திருமணம் செய்துள்ள பள்ளி மாணவிக்கும் இவருக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

17 அக்டோபர் 2010

ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்!

நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீளமானது. அதில் இணையாவிட்டால் அவர்களை ஒருமாதிரியாக பார்க்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அக்கவுண்ட் வைத்திருக்கும் தென்னிந்தியப் பிரபலங்களில் திரிஷாவும் ஒருவர். ஆனால் அவரது பேஸ்புக் அக்கவுண்டை சில விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் திரிஷா. நேற்று காலை திரிஷாவின் பேஸ் புக் பக்கத்திற்குச் சென்ற அவரது நட்பு வட்டாரம், அது பிளாக் ஆகிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
தனது தளம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த திரிஷா உடனடியாக வேறு ஒரு அக்கவுண்ட்டைத் தொடங்கியுள்ளார். இதையாவது யாரும் நோண்டாமல் இருக்க வேண்டுமே என்று புலம்பி வருகிறாராம் திரிஷா.
சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் ட்விட்டர் தளத்திற்குள் சிலர் ஊடுறுவி விஷமம் செய்தது நினைவிருக்கலாம்.

13 அக்டோபர் 2010

அகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்!

ஆஹா ஓஹோவென ஓடும் என எதிர்பார்த்து வரலாற்று படம் எடுத்து மண்ணை கவ்விய செல்வமான டைரக்டரும், அவரது காதல் மனைவி அகர்வாலும் விவாகரத்து செய்து விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
விவாகரத்து முடிந்த கையோடு விதவிதமான லேட்டஸ்ட் ஸ்டில்களை எடுத்து, இன்னமும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்று தண்டோரோ போடத குறையாக அம்மணி எல்லா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஸ்டில்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார்.
அகர்வாலின் அழகை பார்த்து மயங்கிய பலரும் தங்களது படத்தில் நடிக்க அழைத்தாலும், விரல் நடிகரின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டினார் அகர்வால். படத்தில் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சிம்பு கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்திருக்கிறார் அகர்வால்.
இதுஒருபுறம்மென்றால்… இந்த அர்வாலால் முன்னணி இளம் ஹீரோக்கள் 2 பேர் ஒருவர் மீது ஒருவர் ‌செம கடுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. விரல் நடிகரும், உச்ச நடிகரின் மருமகனும்தானாம்.
தனது அண்ணனின் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று மருமகன் நடிகர் கூறி வருகிறாராம்.
ஆனால் விரல் தரப்போ… படத்தில் பெரிய காஸ்டிங் தேவைப்பட்டதால் அகர்வாலை ‌போட்டிருக்கிறோம், என்று கூறியதுடன் மருமகன் மீது கடுப்பில் இருக்கிறதாம்.

11 அக்டோபர் 2010

துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி நீது சந்திரா காயம்!

அமீர் இயக்கும் ஆதி பகவன் படப்பிடிப்பின் போது துப்பாக்கி குண்டு உதட்டில் உரசி சென்றதால் நடிகை நீத்து சந்திரா காயம் அடைந்தார்.
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடிக்கும் படம் ஆதிபகவன். அமீர் இயக்குகிறார். திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த போது விபத்து ஏற்பட்டு நீது சந்திரா காயம் அடைந்தார்.
அவர் உதட்டில் துப்பாக்கி குண்டு உராய்ந்து சென்றது. ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து பற்றி நீது சந்திரா கூறுகையில், “ஆதிபகவன் படத்தில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. தாய்லாந்து துறைமுகப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் காரில் இருந்து இறங்கி கப்பலை நோக்கி செல்வது போன்று காட்சி எடுத்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடப்பது போல் சீன்கள் வைத்து இருந்தனர்.
ஷாட் ஓகே சொன்னதும் காரில் இருந்து இறங்கி நடந்தேன். அப்போது ஒரு குண்டு என்னை நோக்கி வந்தது. நான் விலகினேன். ஆனாலும் என் உதட்டில் உராய்ந்தபடி சென்றது. இதனால் உதட்டில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் வலி தாங்க முடியாமல் அழுதேன். பார்வை மங்கியது. உடனடியாக முதலுதவி சிகிச்சசை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். இப்போது ஓய்வில் உள்ளேன்”, என்றார்.

08 அக்டோபர் 2010

நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க எதிர்ப்பு!

பிரபுதேவாவுடன் கள்ளக்காதல் கொண்டுள்ள நடிகை நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த வேடத்தில் மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம்.
தெலுங்கு இயக்குநர் பாபு, என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை வைத்து ஸ்ரீராம ஜெயம் என்ற புராணப் படத்தை இயக்கவுள்ளார். இதில் பாலகிருஷ்ணா ராமராக நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளனர்.
இந்தநிலையி்ல் பிரபுதேவா- நயனதாரா கள்ளக்காதல் குறித்து பிரபுதேவாவின் மனைவி ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்கக் கூடாதுஎன்று அவர்கள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு, அழகாக குடும்பம் நடத்தி வருபவரும், குடும்பப் பாங்கான முகம் கொண்டவருமான மாதுரி தீட்சித்தை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தீர்மானித்து அவரை அணுகியுள்ளாராம் இயக்குநர் பாபு.

07 அக்டோபர் 2010

ர‌ஜினியின் கடவுள்கள்!

ர‌ஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ர‌ஜினியின் கடவுள் யார்?
ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ர‌ஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.
மும்பைக்கு ரோபோ பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த ர‌ஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.
தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.
பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ர‌ஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதி‌ரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் ர‌ஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ரா‌ஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டிய‌ர், அவரது கடவுள் பால் தாக்கரே.
துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போ‌ஜ்பு‌ரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்… ர‌ஜினியின் மேலும் சில கடவுள்களை தெ‌ரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.

04 அக்டோபர் 2010

கதை பிடித்தால்தான் நடிப்பேன் – தமன்னா!

எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், சிக் நாயகிகளில் முக்கியமானவருமான தமன்னா கை நிறையப் படங்களுடன் நம்பர் ஒன் நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னணியில் இருந்தாலும் கூட அதிக படங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு நடித்துக் குவிக்க தான் விரும்பவில்லை என்றும் நல்ல ரோல்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறுகிறார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
கல்லூரி படத்தில் நடித்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கல்லூரிப் படத்தில் நடித்தபோது நான் மேக்கப் கூட போடவில்லை. இயல்பான தோற்றத்திலேயே நடித்தேன். அந்தப் படம் முழுக்க வெளிப்புறப்படப்பிடிப்புதான். அதுபோன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார் தமன்னா.
பரவாயில்லை, சதையை நம்பும் நாயகிகளுக்கு மத்தியில் கதையை நம்பும் தமன்னா வித்தியாசமானவர்தான்.

02 அக்டோபர் 2010

அனுஷ்காவின் உயரம் அளந்த சிம்பு...

சிம்பு, பரத் இணைந்து நடித்துள்ள ‘வானம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரெடக்‌ஷன் வேலை தொடங்குவதற்கு முன் அப்படியே ஒரு பிரஸ் மீட் வைத்துவிடலாமே என்ற எண்ணத்தில், அதற்கான ஏற்பாட்டையும் கச்சிதமாய் செய்திருந்தனர் வானம் படக்குழுவினர்.
இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்... சிலம்பரசன், பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் கிரிஷ், தயாரிப்பாளர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
அனைத்து மீடியாக்களின் பார்வையும் சிம்பு, அனுஷ்கா மீதுதான்...
தெலுங்கு ‘வேதம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அதன் ரீமேக்தான் வானம் என்பதால், இதில் அனுஷ்காவை எப்படியும் நடிக்கவைத்தே ஆகவேண்டும் என பகீரத முயற்சியெல்லாம் செய்தார் சிம்பு. இது போக ‘நான் அனுஷ்காவின் ரசிகன்’ என்று வேறு சொல்லிவரும் சிம்புவிடம் அது பற்றி கேட்டதற்கு...
"நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகனாகவும் மாறமாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன். 'அருந்ததி' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகனாக மாறிவிட்டேன்.
பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகனாக மாறினேன்” என்றார் சிம்பு.
இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, அனுஷ்கா உயரமானவர் ஆச்சே, அவர்கூட நீங்க சேர்ந்து நடிச்சா பொருத்தமாக இருக்குமா?... அப்படி கேட்டதுதான் தாமதம்...
"அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சிம்புவிடமிருந்து பதில் அம்பாக வெளிப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அனுஷ்காவையும் அழைத்து பக்கத்தில் நின்று அளந்து காட்டினார். (சிம்பு அனுஷ்காவைவிட கொஞ்சம் உயரம்போல்தான் தெரிந்தது...)
கடைசியாக ஒரு கேள்வி, இந்தப் படத்தில் பரத்துடன் நடித்தது போல, தனுஷுடன் நடிப்பீர்களா?...
“தனுஷுடன் மட்டுமல்ல நான் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை" என வெளிப்படையாக பேசினார். அதுதானே சிம்பு.

27 செப்டம்பர் 2010

மகன் பெயரை பச்சை குத்திய மாளவிகா.

பொதுவாக காதலர் அல்லது கணவன் பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான். அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது அன்பு மகன் ஆரவ் மேனனின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளாராம். ஆரவ் குட்டிக்கு இப்போது ஒன்றரை வயதாகிறதாம். அடுத்த குழந்தைக்கும் தயாராகியுள்ள மாளவிகா அந்தக் குழந்தையை டிசம்பர் மாதம் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 செப்டம்பர் 2010

ஆர்யாவுடன் வேட்டை ஆடப்போகிறார் தமன்னா.


லிங்குசாமியின் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால் கடுப்பாகியிருந்த சிம்பு, சற்று ஓய்ந்த பின்னர் இப்பொழுது லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ திரைப்படத்தில் நாயகனாக ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரொடக்ஷன் தான் ‘வேட்டை’ படத்தினை தயாரிக்கிறது. அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் பாடல்களை அதிகமாக வழங்கிவரும் யுவன்சங்கர் ராஜா இப்படத்திலும் தனது கைவரிசையை காட்டவிருக்கிறார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக யாரைப்போடலாம் என்று பலரை நாடியிருக்கிறார்கள். இறுதியாக வேட்டையாடுவதற்கு சிறந்தவர் 'தமன்னா' என லிங்குசாமி அறிவித்திருக்கிறார். ஆகையினால் ஆர்யாவுடன் வேட்டைக்கு தயாராகிவிட்டார் தமன்னா. வெகுவிரைவில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

20 செப்டம்பர் 2010

பூஜா, நிலாவுடன் காதல் இல்லை -ஆர்யா.

ஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நிலாவை காதலிப்பதாகவும் பேசப்பட்டது.
இதுபற்றி ஆர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பூஜா, நிலாவுடன் காதல் என்பதெல்லாம் தவறானவை. இதுவரை யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. நயன்தாராவுக்கு தனியாக பிறந்தநாள் விருந்து அளித்ததாகவும் செய்தி வந்தன. அதிலும் உண்மை இல்லை. அந்த விருந்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவருடன் நான் இணைந்து நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த காமெடி படமாக இது வந்துள்ளது. இதில் நயன்தாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல இயலாது. நேரம் அமையும் போது நடக்கும். எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.
“ஷோ பீப்பிள்” என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து “படித்துறை” என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. வில்லன் வேடத்திலும் நடிக்க தயார்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.

காதலியைத் தீ மூட்டி கொல்ல முயன்ற இளைஞர்!

வெளிநாட்டில் இருந்து எட்டு வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் காதலி மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்ட முயன்ற சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றது. இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு ஒரு இளைஞனுடன் காதலி தகாத தொடர்பில் ஈடுபட்டிருக்கின்றார் என்கிற சந்தேகத்திலேயே இவ்வாறு நடந்து கொண்டார் என்று இவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

19 செப்டம்பர் 2010

போலீஸ் வருவதை காட்டி கொடுத்தது: போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

நியூயார்க்,அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் உள்ளது. எனவே, அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென ஒரு கிளி பறந்து வந்தது. வந்த வேகத்தில் ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது என கொஞ்சி கொஞ்சி பேசியது இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடிவிட்டது.
இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை காட்டிக் கொடுக்க கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

18 செப்டம்பர் 2010

உடல் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால்.

தினமும் 2 டம்ளர் பால் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பால் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உடல் பருமன் உள்ள 40 முதல் 65 வயதுக்குட்பட்ட 300 ஆண், பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கொழுப்பு மற்றும் மாவுச் சத்து குறைவான உணவு வழங்கப்பட் டது. இத்துடன் ஒரு பிரிவினருக்கு தினமும் 2 டம்ளர் பால் வீதம் வழங்கப்பட்டது. இதைவிட சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கூடுதலாகவும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பால் வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் தினமும் 2 டம்ளர் பால் குடித்தவர்களின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து இருந்தது.
பால் குடிக்காதவர்களின் எடையில் மாற்றம் ஏற்படவில்லை. சற்று கூடுதலாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டவர்களின் எடை 5 கிலோ வரை குறைந்தது. குறைவாக வழங்கப்பட்டவர்களின் எடை வெறும் 3.5 கிலோ மட்டுமே குறைந்தது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வைட்டமின் டி சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. சரிவிகித உணவுடன் கொழுப்பு சத்து குறைவான 3 டம்ளர் பால் குடித்து வருவதன் மூலம் தங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

16 செப்டம்பர் 2010

மீண்டும் தெலுங்கில் நடிகை திரிஷா!

இந்திப் படங்கள் தன்னைக் கைவிட்டதைத் தொடர்ந்து தெலுங்குப் படவுலகுக்குத் திரும்பிள்ளார் நடிகை திரிஷா.
தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கட்டா மிட்டா படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார் த்ரிஷா. இப்படத்தை இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து, தயாரித்திருந்தார்.
கட்டா மிட்டா உட்பட அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க த்ரிஷாவை அக்ஷய் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் கட்டா மிட்டா படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இதில் அக்ஷய்க்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் படங்கள் தயாரிக்கும் திட்டத்தை அவர் தள்ளிப் போட்டுள்ளாராம்.
இதையடுத்து அக்ஷய் குமாரின் படங்களில் த்ரிஷா நடிக்க போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இதனால்தான் உடனடியாக தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதேபோல தமிழில் வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளாராம் திரிஷா.

15 செப்டம்பர் 2010

கமலை சந்தோஷப்படுத்திய 3 ஷா!

உலக நாயகன் கமலஹாசனை நடிகை த்ரிஷா சந்தோஷப்படுத்தியுள்ளார். ஆமாங்க, தனக்கு பிடித்த நடிகர் கமல்தான் என்று கூறியிருக்கிறார் 3 ஷா. தமிழில் முன்னணி நடிகையாக உள்ள அவர் தெலுங்கிலும் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை யாக இருக்கிறார். “காட்டா மிட்டா” படம் மூலம் இந்தியிலும் கால் பதித்துவிட்டார். உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என பலமுறை அவரிடம் கேட்கப்பட்டும் இதுவரை அதற்கு பதில் சொல்லவே இல்லை. தற்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து விட்டார். யாரையேனும் ஒருவர் பெயரை சொன்னால் மற்ற ஹீரோ கோபப்படுவார் என்ற பயத்தில் இந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து வந்தார்.
இப்போது முதல் முறையாக தனக்கு பிடித்த நடிகர் கமல் என்று வெளிப்படை யாக கூறி இருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக் கும் “மன்மதன் அம்பு” படத் தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டியே நடந்தது.
தனது நலம் விரும்பிகளை தூது அனுப்பி வாய்ப்பை தட்டி பறிக்க நயன்தாரா முயன்றார். ஆனால் திரிஷா தான் கதாநாயகி என்பதில் கமலும் ரவிக்குமாரும் உறுதியாக இருந்து விட்டனர். இப்படத்தின் டூயட் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
டுவிட்டரில் திரிஷா கூறி இருப்பதாவது :
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதுவரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியை தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்கு பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை.
நடிகைகளில் ஏற்கனவே சிம்ரனை பிடித்தது. இப்போது தமன்னா மற்றும் சமந்தாவை பிடிக்கும் என்று டுவிட்டரில் கூறியுள்ளார் த்ரிஷா.

14 செப்டம்பர் 2010

நடிகை ரவீனாடண்டன் வீட்டில் கொள்ளை!

‘ஆளவந்தான்’, ‘சாது’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ரவீனா டண்டன். திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவரது மாமியார் வீடு, மும்பை லிங்க்கிங் சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் உள்ளது.
இந்த வீட்டில் கணவர் தடானி, மாமனார் குந்தன் தடானியுடன் ரவீனா வசித்து வருகிறார். கடந்த வாரம் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் ரவீனா சென்றிருந்தார். மாலையில் சென்றவர்கள், நள்ளிரவில் வீடு திரும்பினர்.
மறுநாள் காலையில் தனது அறையில் இருந்த பீரோவை ரவீனாவின் மாமனார் குந்தன் திறந்தபோது, அதிர்ந்தார். சூட்கேசில் வைத்திருந்த 9 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக பாந்த்ரா போலீசீல் அவர் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ரவீனா வீட்டில் வேலை செய்த ராம் யாதவ் (40), அசோக் யாதவ் (25) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணையில் நடுங்கிப் போன அந்த வேலைக்காரர்கள், கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
‘‘திருடலாம் என முடிவு செய்தே வேலையை விட்டு சென்றுள்ளனர்.
ரவீனா குடும்பத்தார் பார்ட்டிக்கு செல்லும் தேதியை இருவரும் அறிந்து வைத்திருந்தனர். அன்றைய தினம் கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அதே மாதிரி பீரோவுக்கும் கள்ளச்சாவி பயன்படுத்தியுள்ளனர்.
பாந்த்ரா போலீசார் அவர்களை கைது செய்து பணத்தையும் மீட்டுள்ளனர்.

13 செப்டம்பர் 2010

நயன்தாராவுடன் விரைவில் திருமணம்! பிரபுதேவா தகவல்!


காதல் விவகாரம் பற்றி கேட்கும் போதெல்லாம் சொந்த விஷயம் என்று சொல்லி கருத்து சொல்லாமல் நயன்தாரா, பிரபுதேவா இருவருமே மவுனம் காத்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரபுதேவா பேட்டி அளித்துள்ளார். மும்பை அருகில் உருமி படத்தை இயக்கிக் கொண்டிருந்த அவரிடம் நயன்தாராவுடன் காதல் பற்றி கேட்கப்பட்டது.
கேள்வி: நயன்தாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள்.
அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனை கள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயன்தாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயன்தாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகை களில் நிறைய செய்திகள் என்னைப்பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை.
ஆனால் நயன்தாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயன்தாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.
இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக் களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயன்தாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயன்தாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.

12 செப்டம்பர் 2010

ஸ்ரேயா ஆடிய கேம்!


கெரகம் கூரையை பிய்ச்சுகிட்டு குட்டும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம். டான் சீனு படத்தில் ரவி தேஜாவுடன் நடித்திருந்தவர் அஞ்சனா சுஹானி. இவரை தமிழில் நடிக்க வரச்சொல்லி ஒரே அழைப்புகள். தெலுங்கு சம்பளத்திற்கும் தமிழ் சம்பளத்திற்கும் குறைந்த பட்ச வித்தியாசம் சில லகரங்கள்தான் என்பதால் சரி என்று ஒப்புக் கொண்டு சென்னைக்கும் வந்துவிட்டார் சுஹானி. இந்த நேரத்துலதான் ஸ்ரேயாவின் கோள்மூட்டலால் அந்த வாய்ப்பு அதோகதியாகிவிட்டது அவருக்கு. சுஹானிக்கும் தெலுங்கு ஸ்டார் ராணாவுக்கும் பயங்கர லவ். திடீர்னு சொல்லாம கொள்ளாம ஆந்திராவுக்கு ஓடிருவா. அப்புறம் கால்ஷீட் வாங்கி நினைச்ச மாதிரி ஷ§ட்டிங் எடுப்பதெல்லாம் குதிரைக் கொம்பு என்று ஸ்ரேயா போட்டுக் கொடுக்க, அப்புறம்தான் பறிபோனது சுஹானியின் வாய்ப்பு. இதை அப்படியே ராணாவிடம் போய் சொல்லி அழுதாராம் சுஹானி.
விட்டத்துல அடிச்ச பந்து வினாடியில திரும்பி வரும்ங்கிற மாதிரி, ஸ்ரேயாவின் வாய்ப்புக்கு செம லாக் போட்டார் ராணா. தெலுங்கில் இவர் நடிக்க ஒப்பந்தமான ராணி என்ற படத்திலிருந்து அவரை து£க்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். ஹீரோ சொன்னால் மறுப்பேது? இவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இலியானாவை புக் பண்ணியிருக்கிறார்கள்.

11 செப்டம்பர் 2010

கைலியால்(சாரம்) நின்ற திருமணம்!

சிதம்பரம் எம்.கே. தோட்டத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் சதீஷ்குமார், திரைப்பட இசையமைப்புக் குழு ஒன்றில் கிபோர்டு வாசிப்பாளராக உள்ளார். இவருக்கும் சிதம்பரத்தை அடுத்த கீழவன்னியூரைச் சேர்ந்த செல்வராஜ் மகள் பத்மாவதிக்கும் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்களது திருமணம் வெள்ளிக்கிழமை (10.09.2010) அன்று சிதம்பரம் கோவிலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பவர்கள் திருமண விழாவில் பங்கேற்க கோவிலுக்கு வருகை தந்தனர்.
திருமணம் நேரம் நெருங்கும் வரை பெண்ணின் தகப்பனார் கைலியோடு (லுங்கி) இருந்ததால், மாப்பிள்ளை உறவினர்கள் கிண்டல் செய்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ள நேரத்தில் கைலியோடு இருப்பதா என்றும், வேட்டி கட்டிவர வேண்டும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.
இதற்கு பெண் வீட்டார் எங்களுக்கும் நாகரீகம் தெரியும். இவ்வளவு செலவு செய்து பெண்ணை கட்டிக் கொடுக்கும் எங்களுக்கு வேட்டி கட்டத் தெரியும் என்று பேசியுள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே பெண் வீட்டார் வரம்பு மீறி பேசுவதால், இந்த திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தகப்பனாரும் கோவித்துக் கொண்டு கோவிலைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்களை திருமணத்துக்கு வந்தவர்கள் சமாதானம் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதையடுத்து இருதரப்பினரும், சிதம்பரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
கைலி கட்டியதால்தான் திருமணம் நின்று விட்டதா என்று ஆச்சரியப்படுகின்றனர் சிதம்பரம் பகுதி மக்கள்.

10 செப்டம்பர் 2010

பெண் பித்தர்களுக்கு ஆயுள் குறைவென ஆய்வு சொல்கிறது.

"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!
சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.
பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்
இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.
இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.
இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.
இவர்கள் எல்லோருக்குமே நோக்கம் ஒன்றே ஒன்றுதான்; அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதவிதமான பெண்களை கட்டிலில் வீழ்த்துவதுதான்! கூடவே பெண்கள் புடை சூழ வளைய வருவதும், தங்களுக்கு பெண் ஃபிரண்ட்ஸ்கள் அதிகம் என்பது போன்ற இமேஜை நண்பர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளவும் இதுபோன்று செயல்படுவார்கள்.
அதே சமயம் அசரடிக்கிற பெர்சனாலிட்டி மற்றும் கொஞ்சமே கொஞ்சம் போக்கிரித்தனத்துடன் பெண்களை தானாகவே வந்து வட்டமடிக்க வைக்கிற பிளேபாய்களும் உண்டு.
ஆனால் பெண்கள் மத்தியில் இவர்களுக்கு பெயர் ஸ்வீட் ராஸ்கலாம்!
இந்த மாதிரியான ஆண்கள் குறித்துதான், ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, மேற்கூறிய "ஆயுசு குறைச்சல்" என்ற அதிர்ச்சி வெடியை கொளுத்தி போட்டுள்ளது!
இத்தகைய பிளேபாய்கள் மற்றும் ஸ்வீட் ராஸ்கல்களிடமெல்லாம் காணப்படும் ஒரு பொதுவான குணம் மனம்போன போக்கில் வாழ்வது!
வாழ்க்கை தொடர்பான எத்தகைய நெறிமுறைகளுக்கும் உட்படாமல், புதுப்புது பெண்களை தேடி கண்டபடி திரியும் இவர்களது இந்த குணம்தான் இவர்களது ஆயுளுக்கும் எமனாக அமைந்துவிடுவதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்ட்ரேலியாவின் பிரபல ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் ஜோர்டான்!

07 செப்டம்பர் 2010

பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்(காணொளி இணைக்கப்பட்டுள்ளது).


பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார். பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண் தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார்.
இந்தக் கன்றுக்கும் மனிதக் குழந்தைக்கும் எதுவித வேறுபாடுகளும் இல்லையென அவர் கூறுகிறார்.இந்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவுதி பாய் என்னும் பெண்ணே இவ்வாறு கன்றுக்கு பாலூட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், 'இந்தக் கன்று பிறந்தவுடன் அதனது தாயை பறிகொடுத்தது. அதுநாள் முதல் இந்தக் கன்றை நானே எனது கைகளால் தூக்கி வளர்க்கின்றேன். அந்தப் பசுக்கன்றுக்கு இயற்கை முறையில் நான் பாலூட்டி வருகின்றேன்.
தாய்ப் பசு இறக்கும்போது அந்த இளம் கன்றை நான் கண்டேன். குழந்தைக்கும் அந்தக் கன்றுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சில நேரங்களில் சப்பாத்தி போன்ற உணவுகளை உண்பதற்கு வழங்குவோம். அதனோடு மிகவும் மெதுவாக தண்ணீரை குடிப்பற்கு வழங்குவோம். இந்த விரதத்திலிருந்து அந்தக் கன்று வளர்ச்சியடையத் தொடங்கியது. கடவுள் அருளினால் இந்தக் கன்றை என்னால் வளர்க்க முடிகிறது' என்று தெரிவித்துள்ளார்.
அந்த கிராமத்திலிலுள்ள மற்றுமொருவர் கூறுகையில், 'இந்தச் சம்பவம் முதன்முறையாக எமது கிராமத்தில் நடந்துள்ளது. அப்பெண் எங்கு சென்றாலும் தன்னுடன் கன்று குட்டியையும் கொண்டு செல்வார். எமது தாய் எமக்குப் பாலூட்டியதைப் போன்று அந்தக் கன்றுக்கு பால்கொடுப்பார். அவள் தன்னுடைய பாலையே அந்தக் கன்றுக்கு உணவாக' ஊட்டி வளர்க்கின்றார்' எனத் தெரிவித்துள்ளார்.

05 செப்டம்பர் 2010

பெண்ணை இழுத்துச் சென்று சிறையில் பூட்டி கொடுமைப்படுத்திய காவலர் - அதிர்ச்சியூட்டும் காணொளி இணைப்பு.



வில்ட்ஷிர் பகுதியில் 57 வயதாகும் பமேலா சொமேர்வில்லே என்ற பெண்ணை காவல்துறை அதிகாரி தரையில் இழுத்துச் சென்று சிறைக்குள் பூட்டியதுடன் அந்த பெண்ணை காயப்படுத்தி உணர்வற்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பின் அந்தப் பெண் கண்களில் பலத்த காயங்களுடனும் ரத்தத்துடனும் வெளியே வந்துள்ளார். சந்தை ஆராய்ச்சியாளராக பணி புரிந்த இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஜி-20 எதிர்ப்புக் கூட்டங்களின் போது காவல்துறைக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள உறவு நிலையின் தன்மை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்த போது தன்னுடைய காரில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது சி.சி.டி.வி காமேராவிலும் பதிவாகியுள்ளது. இதனால் அந்தப் பெண் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் குற்றம் நிருபிக்கப்பட்டதால் அன்ட்ரீயுஸ் என்ற அந்த காவலருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
தான் எந்த தவறும் செய்யாமல் காவல்துறை அதிகாரியால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அது போன்ற நிலை வேறு யாருக்கும் இனி ஏற்படக் கூடாது என்பதாலேயே வழக்கு பதிவு செய்ததாகவும் அந்தப் பெண் கூறியதோடு இந்த தண்டனை பொது மக்களை துன்புறுத்தும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

02 செப்டம்பர் 2010

நாய்க்குட்டிகளை ஆற்றில் வீசும் கொடூரம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)


கடந்த வாரம் பிரித்தானியாவை சேர்ந்த 45 வயதாகும் மேரி பேல் என்ற பெண் கொவென்ட்ரி பகுதியில் பூனையை குப்பைத்தொட்டியில் போட்டு மூடிய சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே கோபத்தை உண்டுபண்ணியதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் தற்போது சிகப்பு சட்டை அணிந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் உயிருடன் இருக்கும் நாய்க்குட்டிகளை கொல்வதற்காக வேகமாக ஓடும் ஆற்றுத் தண்ணீருக்குள் தூக்கியெறியும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது விலங்கின ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த வீடியோ கிழக்கு ஐரோப்பாவின் கிரோடியா பகுதியில் எடுக்கப்பட்டிருப்பதை விலங்கின ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாய்குட்டிகள் பயந்து சத்தம் எழுப்பியும் சிறிதும் இரக்கமில்லாமல் அவற்றை தூக்கி ஆற்றுக்குள் போடும் இந்த பெண்ணையும் கண்டறிந்து அதே போல் தூக்கி எறிய வேண்டும் என்ற அளவிற்கு விலங்கின ஆர்வலர்களிடையே இந்த வீடியோ மிகுந்த பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
அந்த பெண் யார் என்பதை கண்டறியும் ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். தினமும் எங்கள் சேவை அமைப்பிற்கு இது போன்ற கொடுமைகள் அடங்கிய படங்களும் வீடியோக்களும் வந்து கொண்டு தான் உள்ளது. விலங்குகளை கொடுமைப்படுத்தும் மக்களின் இந்த மனோபாவம் மாற வேண்டும் என விலங்குகளுக்கான சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

01 செப்டம்பர் 2010

மணமகளை கடத்திய காதலன்.



ஜெயங்கொண்டம்: உடையார் பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் சத்யாவிற்கும், வடவீக்கத்தைச் சேர்ந்த குமணன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இதையறிந்த சத்யாவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா, குமணனுடன் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சத்யாவை அவரது பெற்றோர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். இதற்கிடையில் சத்யாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இந்த விஷயம் அறிந்த குமணன்,. நேற்று இரவு சத்யாவை கடத்தியுள்ளார். மகள் சத்யாவை காணவல்லை என, உடையார் பாளையம் காவல்நியைத்தில் பிச்சை புகார் அளித்ததையடுத்து, போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சத்யா - குமணன் ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், சத்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து, குமணன் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம், சமாதானம் செய்து வரும் சத்யா பெற்றோர், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும், திருமணத்தை உடனே நடத்த வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.